Tuesday, January 10, 2017

வெளிநாட்டில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் – 2017


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்துகொண்டு தொழில்வாய்ப்புக்கருதி வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பின்வரும் தகைமைகளையுடைய மாணவ மாணவிகளிடமிருந்து கோரப்படுகின்றன.



தகைமைகள்.
அ) 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்
1.    தாய் அல்லது தந்தை 2011.08.21 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு பின்னர் 2016.08.21 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு முன்னர் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2.    2016 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்து இருத்தல்.


ஆ) க.பொ.த (சா/த) புலமைப்பரிசில்
1.    தாய் அல்லது தந்தை 2010.12.08 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு பின்னர் 2015.12.08 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு முன்னர் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2.    2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம்இ உள்ளிட்ட 6 பாடங்களுடன் 3 திறமைச்சித்தியுடன்இ ஒரே தடவையில் சித்தியடைந்து உயர் தரம் கற்பவராக இருத்தல்.

இ) உயர்கல்வி புலமைப்பரிசில்
1.    தாய் அல்லது தந்தை 2010.08.04 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு பின்னர் 2015.08.04 ஆம் திகதி அல்லது அத்தினத்திற்கு முன்னர் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2.    2015 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து தற்போது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் முழுநேர உள்வாரி பட்டப்படிப்பு முதல் வருடத்தில் கற்பவராக இருத்தல்.

மேற்படி தகைமைகளையுடைய விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் பதிவுத்தபால் மூலம் 2017.04.30 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் காணும் விலாசத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்பம் அனுப்பி வைக்கும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 'புலமைப்பரிசில் வழங்கல் - ஆண்டு 5/ க.பொ.த (ச.தா)/ உயர்தரம் 2017'  என குறிப்பிடுதல் வேண்டும். (இதில் தனக்கு உரியதை மட்டும் குறிப்பிடுதல் வேண்டும்.)

1.    மாணவரின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி. (அதிபரினாலோ பதிவாளரினாலோ இறப்பர் முத்திரையிட்டு உண்மை என உறுதிப்படுத்தி கையொப்பமிடல் வேண்டும்.)
2.    மாணவரின் கல்விப் பெறுபேற்று சான்றிதழின் பிரதி. (அதிபரினாலோ  பதிவாளரினாலோ இறப்பர் முத்திரையிட்டு உண்மை என உறுதிப்படுத்தி கையொப்பமிடல் வேண்டும்.)
3.    தாய்/ தந்தையின் கடவுச்சீட்டின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ள பக்கத்தின் பிரதி.
4.    தாய்/ தந்தையின் பெயர்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அவைகளை தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தும் ஆணையாளர் ஒருவரினால் வழங்கப்படும் சத்தியக்கடதாசி.
5.    மாணவரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி. (க.பொ.த (சா/த) மற்றும் உயர்தரம் கற்பவர்களுக்கு மட்டும்)
6.    பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பாடநெறி பற்றியும் அதன் கால எல்லை மற்றும் முதலாம் வருடத்தில் கல்வி பயில்கின்றார் என்று பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட கடிதம். (மூலப்பிரதி கட்டாயம்)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய விலாசம்.
முகாமையாளர் (நலன்புரி)
இல 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை
கொஸ்வத்த

பத்தரமுல்லை.
தொலைபேசி இல :0112864117
விண்ணப்ப படிவம் :  http://www.slbfe.lk/file.php?FID=257

Best Regards
V.Prashanthan B.Ed. (Hons), M.Ed (Reading)                                           
Student Counselor - ICBT Campus.
No 178, New Kalmunai Rd, Batticaloa.
Contact: 0773144800 & 0713142200 
E-Mail:prashan002@gmail.com
Web: https://teachsrilanka.blogspot.com/

No comments:

Post a Comment