விழுமியக்கல்வியூம் சமயமும்
சமயங்கள் மக்கள் நல்வாழ்வூக்கான பல்வேறு அறகருத்துக்களை கூறியூள்ளது. ஒவ்வொரு சமயத்தினுடைய புனித நூல்களும் பல்வேறு அறகருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. எந்த மதங்களும் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமே தவிர நிலங்களை அல்ல.
மதங்களின் நோக்கம் மக்களின் மனங்களை அன்பால் ஈர்ப்பதே தவிர அறிவால் தூர்ப்பதே அல்ல. மதம் என்பது மக்கள் இதயத்திற்கு இதயம் அன்பு பயணம் போவதற்கு அமைந்த பாலங்கள் மக்களுக்காக மதங்கள் தோன்றினவே அல்லாமல் மதங்களுக்காக மக்கள் தோன்றவில்லை. இந்த பேருண்மையை எல்லா மதங்களும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. உண்மையான கடவூள் பற்றாளன் உண்மையான மதத்தினை நேசிப்பவன் ஆவான். அவன் தன்னால் பார்க்க முடியாத கடவூளை எல்லா உயிர்களிடத்திலும் பார்க்கின்றான். அவனுடைய கடவூள் பக்தி எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக மலர்கிறது. அவன் யாரிடமும் பகைமை கொள்வதே இல்லை. இவ்வாறு சமூக நல்லுறவையூம் விழுமிய பண்பாட்டையூம் மக்களிடையே வளர்த்தெடுப்பதற்கு பிரதானமாக சமயங்கள் துணை நிற்கின்றன.
மதங்களின் நோக்கம் மக்களின் மனங்களை அன்பால் ஈர்ப்பதே தவிர அறிவால் தூர்ப்பதே அல்ல. மதம் என்பது மக்கள் இதயத்திற்கு இதயம் அன்பு பயணம் போவதற்கு அமைந்த பாலங்கள் மக்களுக்காக மதங்கள் தோன்றினவே அல்லாமல் மதங்களுக்காக மக்கள் தோன்றவில்லை. இந்த பேருண்மையை எல்லா மதங்களும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. உண்மையான கடவூள் பற்றாளன் உண்மையான மதத்தினை நேசிப்பவன் ஆவான். அவன் தன்னால் பார்க்க முடியாத கடவூளை எல்லா உயிர்களிடத்திலும் பார்க்கின்றான். அவனுடைய கடவூள் பக்தி எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக மலர்கிறது. அவன் யாரிடமும் பகைமை கொள்வதே இல்லை. இவ்வாறு சமூக நல்லுறவையூம் விழுமிய பண்பாட்டையூம் மக்களிடையே வளர்த்தெடுப்பதற்கு பிரதானமாக சமயங்கள் துணை நிற்கின்றன.
பொதுவாக சமயங்கள் என்பன மனிதனை நல்வழிப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான ஒரு ஊடகமாக செயற்படுகின்றது. அதாவது மனிதனை நல்ல விடயங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையூம் சூழல்நிலமைகளையூம் ஏற்படுத்தியூள்ளன. சமய நம்பிக்கை என்பது இந்த உலகத்தை சகோதரத்துவம்இ சமாதானம் என்னும் வழிகளில் இட்டு செல்கின்றது. அத்தோடு சமயம் என்பதிலிருந்து மனிதமனமானது மனித விழுமியங்களையூம் கலாசார பண்பாட்டு அம்சங்களையூம் மனித சமூகம் கற்றுக்கொள்கின்றது. அதே போல மனித சமூகத்தை ஒரு ஒழுக்கமுறை சார்ந்து விளங்கி கொள்ளவூம் மனித மான்பு நிறைந்த பண்புகளாவன சுயநம்பிக்கைஇ தீய சீர்திருத்தம் சுயமாக உணர்ந்து நடந்துக்கொள்ளும் தன்மைஇ சுய ஒழுக்கம்இ சுயமான விருத்தி போன்ற பண்புகளையூம் சமயம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கின்றது.
உலகிலே எல்லோராலும் எல்லாக் காரியங்களையூம் இயற்ற முடியாது. பொதுவாக நல்ல செயல்களைச் செய்ய எல்லோராலும் முடியாது. அருஞ் செயல்களை ஆற்றுவோர் ஒரு சிலர்தான் காணப்படுகின்றார்கள். உயர்ந்த உள்ளமும்இ நுட்ப அறிவூம்இ சிறந்த ஆற்றலும் உள்ளவர்கள் தான் பெறுமதியான நல்ல செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். அதாவது இங்கு மக்களிடையே பண்பாட்டையூம்இ நெறிமுறையான விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இன்று உலக பொதுமறையான திருக்குறலானது அனைத்து மதங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. குறிப்பாக பாகுப்பாடற்ற முறையில் எந்த மதக்கருத்தையோ விமர்சிப்பதாக அமையவில்லை. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தேவையான சகல நெறிமுறைகளையூம்இ வழிகாட்டல் விடயங்களையூம் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
“நன்மை செய்வதற்கு முடியாதவர்களாயினும் தீமை செய்வதை நிறுத்திவிடுங்கள்இ இதுதான் எல்லாரும் மகிழ்ச்சியடைத் தகுந்த இனிய குணம். அவ்வாறின்றி உங்களை நல்ல நெறியிலே செலுத்தும் வழியூம் அதுதான். எனவே இவ்வாறு “நன்றி” என்ற விடயமானது சகல சமயங்களிலும் அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. அதிலும் இந்துக்களின் மத்தியில் அதிகளவூ பயன்பாட்டில் உள்ளது.
விழுமியம் தொடர்பான பலவிதமான கருத்துக்களையூம் சிந்தனைகளையூம் எடுத்துக்கூறுவதாக இந்து சமயம் விளங்குகின்றது. அந்த வகையில் இந்து மதமானது பல்வேறு கடவூள்களையூம் புனித நூல்களையூம் ஏற்றுக்கொள்கின்றன. இந்த புனித நுல்கள் சிலவற்றில் மக்களை ஒற்றுமையாக வாழச்செய்வதற்கான வழிமுறைகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் வேதங்கள் முதன்மையானவையாக உள்ளது. எல்லா மக்களும் ஒற்றுமையூடனும் இன்பமாகவூம் வாழ வேண்டும் எனும் சிந்தனை வேதங்களில் முக்கியமானதொரு அம்சமாகும். பொதுவாக இந்துக்களின் புனித நூலான “பகவத்கீதையில்” பல்வேறு விதமான ஒழுக்க விழுமியக் கருத்துக்களும் அறம் தொடர்பான சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்து சமய வேதங்கள் கூறும் சமூக நோக்கங்களை ஆராயூம் போது உண்மையான சமயத்தின் நோக்கம் மனிதன் தனது அகவயமான நட்பண்புகளை வளர்த்துக்கொண்டு தன்னை ஒரு உண்மையான மனிதனாக மாற தூண்டுவதாக அறக்கருத்துக்கள் அமைகின்றன. மேலும் வேதங்கள் முதல் இக்காலத்தில் தோன்றிய நூல்கள் வரை எல்லாம் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், ஒழுக்கம் சார்ந்த விடயங்களையே அதிகமாக கூறியூள்ளன.
உதாரணமாக “ஒரு மனிதனுக்கு செய்யூம் சேவையானது இறைவனுக்கு செய்யூம் சேவையென கைள்ளீய உபநிடதம்” கூறுகின்றது. மேலும் “ஏகம் சத்பிப்ரா வகுதா வதந்தி” இவ்வாறு அழைப்பதனால் வேதங்கள் ஆரம்பகாலத்தில் பரம்பொருள் ஒன்றே என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இந்து மதமானது ஒரு இறைக்கொள்கை என்ற நிலையினை கொண்டுள்ளது. அதாவது பரம்பொருள் ஒன்று என்றும் அதன் வடிவங்களாக ஏனைய செயற்பாடுகள் என்பன அமையப்பெற்றுள்ளன. மேலும் “கீதையில்” கிருஸ்ணபகவான் மனிதர்கள் என்னை பலவாறாக எந்த ரூபத்தில் வணங்கினாலும் அவர்களுடைய பக்தியை மேலோங்க செய்கின்றேன் என்று அருளியூள்ளது. மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை தௌpவூப்படுத்தும் ஒரு கூற்றாக அமைந்துள்ளது. எனவே இதனடிப்படையில் பார்க்கின்ற போது இந்து சமயத்தில் தோற்றம் பெற்ற நூல்கள்இ வேதங்கள் என்பன மக்களிடையே பரஸ்பரம் தன்மையை ஏற்படுத்தல் மற்றும் சமூக ரீதியில் புரிந்துணர்வையூம் ஒழுக்க ரீதியான பண்பாட்டு அம்சங்களையூம் எடுத்துக்காட்டுகின்றது.
இந்து சமயத்தில் வேதங்களை பொருத்தமட்டடில் மனிதர்களிடையே மட்டுமன்றி பிற உயிர்னங்களிடத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது. இதனை யசூர் வேதமானது “ எல்லா உயிர்களையூம் நாம் தோழமை நோக்குடன் பார்போனாக நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தோழமை நோக்குடன் நோக்குவோமாக என எடுத்தியம்பப்பட்டுள்ளது. (யசூர் வேதம் 36:18)
உபநிடதம்இ மகாவாக்கியங்கள் “நானும் அது நீயூம் அது எல்லா ஒன்று என்னும் அனைவரையூம் சம நோக்குடன் நோக்கும் உயர் நிலை அறத்தை போதிக்கின்றது. அதாவது அனைவரிலும் தெய்வீகம் உண்டு அனைவரையூம் நேசிஇ அனைவரிடமும் அன்பாய் இரு என்னும் உயர்ந்த மனித நேயத்தை போதிக்கின்றது. குறிப்பாக இந்து சமயத்தில் “அன்பே சிவம்” என்ற மந்திரமானது உலகிலுள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பாய் இருத்தலை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் மனித உறவூகளின் வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் சைவம் மனிதர்டத்தில் வேறுபாடு காட்டாமல் “தேவன் ஒருவனே எனவூம் அவரை வழிப்படுபவர்களின் குலமும் ஒன்று எனும் அம்சமும் எடுத்துக்காட்டப்படுகின்றது.
இதனை “ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமீன் நமனில்லை நாணமே” (திருமந்திரம் : 2104) என குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் இனம்இ மதம்இ சாதி ரீதியாக எந்த ஒரு வேறுபாடும் இருக்க கூடாது என எடுத்துக்காட்டி உலக சகோதரத்துவத்தை திருமூலர் முன்வைத்துள்ளார். இதனை போலவே சித்தாந்த சாஸ்திரங்களின் ஒன்றான சிவஞான சித்தியார் பிற சமயத்தவர் வணங்கும் கடவூளும் சைவர்களுடைய கடவூளும் ஒன்று என குறிப்பிடப்படுகின்றது. இதனை “யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே”, மற்றும் மாதொரு பாகனார் தாம் வருவர்” எனும் அடிகள் விளக்கியூள்ளன.
இங்கு முக்கியமாக பார்க்கும் போது இந்து சமயத்தினுடைய விசாலமான பார்வையூம் அறவணைப்பு தன்மையூம் தௌpவாக விளங்குகின்றது. இங்கு சமய காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்ட மனித நேய அம்சங்கள் மக்களுக்கான ஒழுக்க விழுமியக்கருத்துக்களை எடுத்துக்கூறுவதனை அவதானிக்கலாம்.
இந்து சமயத்திலே திருமனம் என்ற விடயமானது அதிகளவூ ஒழுக்கவிழுமியங்களை கொண்டதாக இருக்கின்றது. அதாவது இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையானது பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக இச்சந்தர்ப்பங்களில் சமயங்களை அடிப்படையாக கொண்ட வகையில் இடம்பெற்றாலும் குல, மத, சாதி, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் என்பன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து சமயத்திலே கடவூள் நம்பிக்கை என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கடவூள் மீதான பக்தியை செலுத்தலாம். அதாவது எவரும் கட்டுப்படுத்தலன்றி சுயமாக தமது மதத்தினை பின்பற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்ப்படுகின்றன.
“கீதையில்” கிருணபகவான் மனிதர்கள் என்னை எந்த உருவத்தில் வணங்கினாலும் அவர்களுடைய பக்தியை மேலொங்க செய்கின்றேன் என்று அருளியூள்ளது. மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு கூற்றாக அமைந்துள்ளது. ஒரு சமூக நல்லுறவையூம் சமூக ஒழுக்க விழுமியங்களையூம் வேண்டியிருக்கும் சமயங்களில் இந்து சமயம் முக்கிய இடத்தை பெறுகின்றது. பொதுவாக பார்த்தால் இந்து சமயத்தில் எல்லா சமயத்தின் கருத்துக்களையூம் பிரிவூகளையூம் உள்வாங்கவூம்இ ஆதரிக்கும் பண்புகள் மேலோங்கி காணப்படுகின்றது.
குறிப்பாக இந்து சமயத்தில் காணப்படுகின்ற ஒரு பொருள் கொள்கைஇ பல பொருள் கொள்கை போன்ற கருத்துக்களும் காணப்படுகின்றது. இவ்வாறு பன்மைத்துவத்திற்குள் ஒருமைபாட்டை கட்டியெழுப்பும் ஒரு சமயமாக இந்து சமயம் காணப்படுகின்றது.
“யாவார்க்கும் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்கும் பசுவிற்கு ஒரு வாயூரை
யாவார்க்கும் உண்ணும் போது ஒரு கைபிடி
யாவார்க்கும் பிறர் இன்னுரை தானே…”
எனவே மேற்கூறப்பட்ட திருமந்திர பாடலடியின் மூலம் திருமூலர் ஜீவகாருண்யத்தை பற்றியூம் அத்துடன் சமூக நல்லுறவூம் ஒழுக்க விழுமியங்கள் பற்றியூம் எடுத்துக் கூறுகின்றார். ஏனைய சமயங்களை விட அதிகளவான விழாக்கள் மற்றும் விரதமுறைகள் இந்து சமயத்திலே காணப்படுகின்றது. குறிப்பாக விழாக்களில் தைப்பொங்கள், சித்திரை புத்தாண்டு, ஆடிபதிணெட்டு, தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி போன்றனவூம் விரதங்களை பொருத்தமட்டில் சதூர்த்தி, கந்தசஷ்டி, திருவெம்பாவை, அமாவாசை போன்ற மக்கள் மத்தியிலே அதிகளவூ அனுஷ்டிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான நிகழ்வூகள் உறவூகளை வளர்ப்பதிலும், பண்பாட்டு விடயங்களை பரிமாறவூம், மகிழ்ச்சினையூம், ஒற்றுமையினையூம் ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது. அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ஒவ்வொரு இந்துவூம் கோயில்களுக்கு செல்லுதல் முக்கியமான கடமையாக உள்ளது. மக்களிடையே விழுமியத்தினை எற்படுத்துவதிலும் ஒத்துழைப்பையூம், புரிந்துணர்வூகளையூம் ஏற்படுத்துவதில் இந்து சமயமானது அதிகளவூ பங்களிப்பினையூத் முக்கியத்துவத்தையூம் கொண்டு காணப்படுகின்றது.
ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதில் இஸ்லாமிய சமயமானது அளப்பரிய சேவையினை செலுத்துகின்றது. இஸ்லாமிய சமயம் சமாதானத்தையூம் சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகளையூம் மிகவூம் உறுதியாக எடுத்துக் கூறுகின்றது. உதாரணமாக இஸ்லாம் என்கின்ற சொல்லானது சாந்தி, சமாதானம் என்று வகையில் அர்த்தப்படுகின்றது. அதே போல ஒரு இஸ்லாமியர் இன்னுமொரு இஸ்லாமியரை பார்த்து வணக்கம் சொல்லும் போது உங்களிடம் சாந்தியூம் சமாதானமும் உருவாக வேண்டும் என்பதாகும். எனவே இஸ்லாமியம் அடிப்படையிலேயே சாந்தியினையூம், சமாதானத்தையூம் வழியூறுத்தி நிற்கின்றது.
மதங்களினுடைய அடிப்படையான விடயங்களை எடுத்துக்கூறுவதில் புனித நூல்கள் அதிகளவூ முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் “அல்குறான்” எனும் புனித நூலும் அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகர்கள், விடுதலையை விரும்பும் அடிமைகள் முதலியோருக்கு அறம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வழியூறுத்துகின்றது. குறிப்பாக ஒருவரை சமய மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்க கூடாது என இஸ்லாம் கூறுகின்றது. அதே போல எனக்கு என்னுடைய மார்க்கம் எவ்வாறு முக்கியமோ அது போல உன்னுடைய மார்க்கம் முக்கியமானது என்ற கருத்தானது ஒவ்வொருவருக்கும் தத்தம் மனம் விரும்பும் சமயத்தை பின்பற்றும் உரித்துடையவர்கள் என்பதை வெளிக்காட்டுகின்றது.
இஸ்லாம் சமயத்திலே உருவ வழிபாடு என்பது இல்லை. அதாவது இங்கு இறைவன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் “பிறை என்ற வடிவத்தினை மட்டுமே கொண்டு தமது வழிப்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். ஒரு முஸ்லிம் அல்லாதவனை துன்புறுத்துபவன் என்னை துன்புறுத்துவதற்கு ஆவான். என்னை துன்புறுத்தியவன் இறைவனை துன்புறுத்தியவன் ஆவான் என்ற கருத்தை இஸ்லாம் கூறுகின்றது. ஆகவே இஸ்லாம் ஏனைய மதத்தினை பழிக்கவோ பாகுப்பாடு காட்டவோ கூடாது என்று வழியூறுத்துகின்றது.
ஏனைய மதங்களை விட இஸ்லாம் சமயத்தில் அதிகளவான கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றது. அதாவது இங்கு ஒழுக்க விழுமியம் சார்ந்த விடயத்திற்கு கூடுதலான முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. முக்கியமாக இஸடலாமிய சமயத்தில் நோன்புஇ ஹஜ் போன்ற வழிபாட்டு முறைகள் சர்வதேச ரீதியான சமூக ஒற்றுமையையூம் அன்பினையூம் சகோதரத்துவத்தினையூம் வழியூறுத்துகின்றது.
இஸ்லாமிய சமயம் அடிப்படையில் “ஏழை வரி” என்ற விடயத்தை வழியூறுத்துவதன் மூலம் சமூகத்தில் ஏற்ற தாழ்வினை இல்லாது செய்வதற்கும் பணம் படைத்தவர்கள் தனது செல்வத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்து சமூகத்தின் பொருளாதார ஏற்ற தாழ்வை குறைக்கவூம் உதவூவதுடன் ஏற்றதாழ்வூகளற்ற ஒரு செம்மையான சமூகத்தை உருவாக்கவூம் சமூக நல்லுறவூடன் கூடிய விழுமியப்பண்பாட்டை கட்டியெழுப்பவூம் இஸ்லாம் சமயம் அதிகளவூ முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது.
புனித குறான் நூலின் ஊடாகஇ 49 அத்தியாயம் 13 வசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. மனிதர்கள் நிச்சியமாக நாம் உங்களை ஓர் ஆண் ஓர் பெண்ணிலிருந்து தான் சிருஷ்டித்தோம். பின்னர் ஒருவர் மற்றவைர அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவூம் கோத்திரர்களாகவூம் மாற்றினோம். ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரை விட மேல் என்று பெருமை பாராட்டி கொள்வதற்கு இல்லை. எனவே மேலே கூறப்பட்ட விடயமானது அனைத்து மக்களும் சமமான முறையில் வாழ்வதற்கும், சமூகத்தில் ஏற்ற தாழ்வூகளை இல்லாமல் செய்வதற்கு அதிகளவூ முக்கியத்துவம் பெறுகின்றது.
இஸ்லாமிய ஒழுக்கவியலின் அடிப்படை இறைவனின் விருப்பத்தை உறுதியாக நிறைவேற்றுவதாகும். மனித குலத்தினுடைய விளக்கங்களுக்கும் புரிதலுக்குமாக குர்ஆன் பின்வருமாறு உபதேசிக்கின்றது. “நன்மையை புரியூம் படி ஏவூஇ தீமையைத் தடுஇ மேலும் எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சியம் இவையெல்லாம் வலியூறுத்தப்பட்ட விடயங்களாகும். (குர்ஆன் 31:18) மனிதனுக்கு நாம் நன்மை செய்தால் எமக்கு மறுப்பிறப்பிலே அதன் பயனை கண்டு கொள்வார். இது சமூத்திலே பிறருக்கு நன்மை செய்வதை வலியூறுத்துகின்றது.
இஸ்லாமிய சமூக அமைப்பின் சிறப்பியல்புகளாக ஈமான், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, கூட்டுப்பொறுப்பு, தலைமைத்துவம், சமூக நீதி போன்றவை அதிகளவூ வலியூறுத்தப்படுகின்றது. “நான் நற்குணங்களை பூரணப்படுத்தவே அனுப்பப்பட்டுள்ளேன்”,f “தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும்இ விரும்பாதவரை உங்களில் யாரும் ஈமான் கொண்டவராகமாட்டார்”. இதனை தவிர நோன்பு என்பது இன்று இஸ்லாமிய சமயத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கியமான விழாவாகும். அதாவது 40 நாட்கள் ஒரு வேலை உணவை மட்டும் எடுத்து தம்தை உடலியல் ரீதியாகவூம் உளவியல் ரீதியாகவூம் வழிப்படுத்துகின்றார்கள. குறிப்பாக ஏனைய சமயங்களிருந்து பார்க்கும் போது சற்று வேறுப்பட்ட ஒழுக்க விழுமிய அம்சங்களை பிரதிப்பலிப்பதாக அமைகின்றது.
அல்குறான் மனித சமூதாயம் ஒன்றுதான் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது மனித சமுதாய உற்பத்தியானது ஒரே ஆத்மாவிலிந்து தோற்றம் பெற்றதும், ஒரே சமூகத்தினராகவூம், ஓரே குலம், ஓரே மார்க்கம் என்பவற்றை கொண்டவர்களாக காணப்பட்டார்கள. பொதுவாக முஸ்லிம்கள் கட்டாயம் 4 வேலை தொழ வேண்டும் அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் போன்ற அடிப்படையான கட்டுப்பாடுகளும் இஸ்லாம் சமயத்தை உயர்த்தி நிற்கின்றன.
நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :“நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.” அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ஆதாரம் : புகாரிஇ முஸ்லிம்.
தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவூக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள். சூழல் எனும் போது பெற்றார், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றௌர்களாவர். எனவே இவ்வாறாக சமூக ஒழுக்க நெறிகளையூம் விழுமியக்கருத்துக்களையூம் தன்னகத்தே கொண்டதாக இஸ்லாம் சமயம் காணப்படுகின்றது.
கிறிஸ்தவர்களின் சமயம் கூறுகின்ற அடிப்படை கொள்கையான “மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்” ஆவான் என்ற கருத்து யேசு கிறிஸ்து இறைமகனாக மனிதனாக இவ்வூலகில் அவதரிக்கின்றார். இந்த பின்னனியில் மற்றவர்கள் அல்லது மற்ற மனிதர்களை இறைவனின் சாயலாக பார்க்கின்ற கண்ணோட்டம் கிறிஸ்தவ சமயத்தில் வழியூறுத்துவதானது சமூக ஒற்றுமைக்கும் மக்களை நல்வழிப்படுத்தவூம் உதவியாக அமைகின்றது. இங்கு இறைவனின் தன்மை மனிதனிலே வியாபித்திருக்கின்றது. அதாவது சகோதரத்துவம்இ அன்பு, இறக்கம், சகிப்புத்தன்மை என்பன மனித சமூகத்தில் மீது ஏற்படுத்தப்படுகின்றது. இச்சமயத்தில் இறக்கம், இறைவன் மீது அன்பு காட்டுதல், தூய்மைஇ மனித சமூகத்தை நேசித்தல் போன்ற விடயங்களை அடிப்படை அம்சமாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தில் புனித நூலாக “பைபில”; என்பது காணப்படுகின்றது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்லுதல் முக்கியமான விடயமாகும்.
கிறித்தவம் ஓரிறைக் கொள்கையூடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையூம் அவரது போதனைகளையூம் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவூ பெற்றவர்” (“அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Christos; - Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் கிறிஸ்தவம் காணப்படுகிறது.
கிறிஸ்தவம் பல உட்பிரிவூகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறித்து என கிறித்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.பத்துக் கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவூரைத் தொகுப்புகளுள் முதன்மையானது; இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறித்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் மைய இடம் பெறுகிறது. பத்துக் கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள்இ இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக்கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தின் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.
உண்மையான கடவூளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது
ஓய்வூ நாளைத் தூயதாகக் கடைப்பிடி
உன் தந்தையையூம் தாயையூம் மதித்து நட
கொலை செய்யாதே
விபசாரம் செய்யாதே
களவூ செய்யாதே
பொய்ச்சான்று சொல்லாதே
பிறர் மனைவியை விரும்பாதே
பிறர் உடைமையை விரும்பாதே.
மேற்கூறிய பத்துக் கட்டளைகளயூம் வரிசைப்படுத்துவதில் கிறித்தவ சபைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உண்டு. நற்செய்திகளின்படி, கிறித்து இச்சட்டங்களை இரண்டு முதன்மைக் கட்டளைகளுக்குள் அடக்குகிறார். அவை:
மனிதர் கடவூளைத் தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும்.
மனிதர் தம்மைத் தாமே அன்புசெய்வதுபோல பிறரையூம் அன்புசெய்ய வேண்டும்.
நம்பிக்கை அறிக்கையில் அடங்கியூள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன:
தந்தையாம் கடவூள் உலகைப் படைத்தவர் என்பதில் நம்பிக்கை; இயேசு கிறித்து கடவூளின் மகன், உலகத்தைப் பாவத்திலிருந்து மீட்க மனிதராகப் பிறந்தவர்; தூய ஆவி மனிதரைப் புனிதராக்குகின்றார்.
கிறித்துவின் சாவூ, அவர் பாதாளத்தில் இறங்கியது, உயிர்த்தெழுதல், மற்றும் விண்ணேற்றம்
திருச்சபையின் புனிதமும் புனிதர்களுடனான ஒன்றிப்பும்
கிறித்துவின் இரண்டாம் வருகை, உலகத் தீர்ப்பு மற்றும் இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கை.
இயேசு கிறித்து கடவூளின் மகன், கடவூளால் திருப்பொழிவூ பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறித்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையூம் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவூள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறித்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவூம் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
மெசியா குறித்து கிறித்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூ+தர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கிஇ அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையூம் முடிவில்லா நிலைவாழ்வையூம் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையூம் உயிர்த்தெழுதலையூம் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறித்தவரின் நம்பிக்கை.
கிறித்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறித்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவூளின் அவதாரமாகவூம் “உண்மையான கடவூளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையூம் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையூம் ஆசைகளையூம் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையூம் (பாவம்) செய்யவில்லை. கடவூளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, “கடவூள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்". அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார். மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பி இறந்தோரை உயிர்ப்பிப்பதுஇ கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவூதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார். 2வது நூற்றாண்டின் கிறித்தவ பொதுயிட வழிபாட்டைக் குறித்து ஜஸ்டின் மார்டையர் பேரரசர் அன்டோனியசு பையசுக்கு வழங்கிய முதல் மன்னிப்புக் கோரல் உரையில் கூறியூள்ளது இன்னமும் பொருந்துகின்றது.
இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறன்று நகரத்திலுள்ள அல்லது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்று கூடி ஏசுவின் சீடர்கள் அல்லது தேவதூதர்களின் நினைவூக்குறிப்புக்களையூம் போதனைகளையூம் படிக்கக் கேட்கின்றனர்;படித்து முடித்த பிறகு கூட்டத்தலைவர் கேட்டோர் அனைவரையூம் கேட்ட நல்ல விழுமியங்களை கடைபிடிக்கக் கோருகின்றார்; பிறகு அனைவரும் எழுந்து தொழுகின்றனர்; தொழுது முடிந்த பின்னர் ரொட்டி, வைன், நீர் கொணரப்படுகின்றது; கூட்டத்தலைவர் மற்றவர்களைப் போலவே தொழுது நன்றி நவில்கிறார்; அவரது நன்றி நவில்கையை ஏற்று அனைவரும் ஆமென் எனக் கூறி ஒப்புமை வழங்குகின்றனர்; நன்றி கூறப்பட்டப் பொருட்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது; வராதவர்களுக்கும் உதவிக்குருமார்களால் அனுப்பப்படுகின்றது; செல்வம் படைத்தஇ விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு இயன்றத் தொகையை தலைவருக்கு அளிக்கின்றனர்; இதனைக் கொண்டு அனாதைகள், விதவைகள், உடல்நலிந்தோர் மற்றும் உதவித் தேவைப்படுபவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்கின்றார்.
கிறிஸ்தவத்தில் அனைத்து படைப்புகளிலும் உயர்ந்த படைப்புமனிதன் என்பதும் மனிதன் தனியே இருப்பது இறைவனுக்கு விருப்பம் இல்லை என்பது தொடக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறைவன் மனிதனை குடும்ப வாழ்வூக்கும் சமூக வாழ்வூக்கும் அலைக்கின்றார் என்பதை தௌpவாக்குகின்றது. இதன்படி சமூக வாழ்வின் வெற்றிக்காக சுயநலத்தை உடைத்தெறிந்து அர்ப்பணிப்புடன் வாழ்வது முக்கியமாகும். இதற்காக இறை அன்பிலும் இறை இரக்கத்திலும் வாழ்வை கட்டியெழுப்புதல் மிக உன்னதமான விடயமாகும். அன்பை முதன்மைப்படுத்தி நீதியாக செயற்படுவதால் சமூகத்தின் பொது நலனையூம் உண்மையான அமைதியையூம், ஒழுக்க விழுமியத்தையூம் கட்டியெழுப்பலாம் என திருவிபிலியச் சிந்தனை கூறுகின்றது.
“கண்ணுக்கு கண்இ பல்லுக்கு பல்” எனும் பழைய ஏற்பாட்டின் சட்டத்திற்கு அப்பால் சென்று கிறிஸ்துவின் போதனைகளும் வாழ்க்கையின் முன்மாதிகளினதும் வழியாக முழுமையாக மாற்றி அமைத்து உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள் உங்களை துன்புறுத்துவோருக்காகவூம் இறைவனிடம் வேண்டுங்கள் (மத்தேயூ 05:43) என்ற கருத்தின் ஊடாக சகோதரத்துவ அன்பின் புதிய கண்ணோட்டத்தினை கிறிஸ்துவின் “மழை பொழிவில்” காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய சமயங்களை காட்டிலும் இச்சமயத்தில் கிறிஸ்மஸ் என்ற விழா மாத்திரமே அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கியமான விழாவாக உள்ளது. அதாவது யேசு கிறிஸ்து பிறந்த தினத்தினை நினைவூ கூறும் வகையிலே உலகலாவிய மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொதுவாக இன்று ஒரு மதத்தினுடைய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் என்பன இன்னொரு சமயத்தினுடைய விடயத்தில் தாக்கத்தினை செலுத்துவதை காணலாம். அதாவது இன்று இந்துஇ இஸ்லாம் சமயங்களில் கோயில் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் போது தூய்மையூடனும் பாதனிகள் இல்லாமல் தான் செல்ல வேண்டும். இம்முறையானது அவர்களின் ஒழுக்கம், நெறிமுறையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான முறைகள் கிறிஸ்தவ மதங்களில் காணப்படுவதில்லை. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் ஒரே விதமாக நோன்பு பிடிக்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மன்னிப்பு என்ற முறையானது இன்று அதிகளவூ கிறிஸ்தவ மதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதாவது எவராவது தவறு அல்லது பிழையாக நடக்கின்ற போது பாவ மன்னிப்பு என்ற ஒழுங்கு முறையானது காணப்படுகின்றது. இங்கு 07 தடவை அல்லது 70 தடவை ஒருவருக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று இம்மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை என்ற விடயமானது சகல சமயங்களிலும் அவரவர் விருப்பின் பேரிலே அமைதல் வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. இறைவன் மீதான பக்தியானது சூழல் மற்றும் நிலமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இஸ்லாம் சமயத்தில் நேரத்திற்கு தொழ வேண்டும். ஆகவே இச்சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வசதியான இடங்களில் தமது கடமைகளை மேற்கொள்ளலாம். விழுமியப்பண்புகளில் தானம் வழங்கல் மிகவூம் முக்கியமான விடயமாகும். அதாவது ஏழைகளுக்கு உதவூதல்இ வறியவர்களுக்கு உதவூதல் என்ற வகையில் உள்ளது. இன்று தானம் வழங்குவதில் அனைத்து மதங்களும் ஒரே விதமான போக்கையே கொண்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.
இன்று பெண்கள் தொடர்பாக ஒவ்வொரு மதமும் வெவ்வேறான விடயங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது இஸ்லாம் சமயமானது பெண்களுக்கு அதிகளவான கட்டுப்பாடுகளையூம் விதிமுறைகளையூம் நடைமுறைப்படுத்தியூள்ளது. குறிப்பாக அவர்கள் அணியூம் உடைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். ஏனைய இந்துஇ கிறிஸ்தவ மதத்திலோ அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறலாம். மரியாதை என்ற பண்பாட்டை பொருத்தளவில் இந்து சமயமானது அதிகளவூ கரிசனை கொண்டுள்ளது. பிள்ளைகள் எப்பொழுதும் தமது பெற்றாரை வணங்குதலை ஒரு கடமையாக கொண்டுள்ளார்கள்.
உயிர்களிடத்தில் அன்பாக இருத்தலை அனைத்து மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயமாக காணப்படுகின்றது. அதாவது உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக பழகுதல் வேண்டும். எனவே இவ்வாறாக மதங்களின் விழுமிய பண்பாட்டு விடயங்கள் காணப்பட்டாலும் கூடுதலாக மதங்கள் ஒருவரை நல்வழிப்படுத்தவூம் ஒழுக்க விழுமியத்துடன் வாழ தூண்டுகோலாக அமைவதாகவே காணப்படுகின்றது.
Visvalingam Prashanthan B.Ed. (Hons), M.Ed. (Reading)
Student Counselor
ICBT Batticaloa Campus | No 178A, New Kalmunai Road | Batticaloa
General: 0654777888 | Mob: 0777809819 / 0713142200
E-mail: prashan002@gmail.com | Web: www.teachsrilanka.blogger.com
No comments:
Post a Comment