Wednesday, June 17, 2015

ஆசிரியர் தொழில்வாண்மையூம் பாடசாலை அபிவிருத்தியூம் 

(Relationship on Teachers Professional & School Development)

        இன்றைய காலத்தில் கல்வியினை வழங்குவதில் ஆசிரியர்கனின் பங்களிப்பபு என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் ஒரு சமூகத் தொழிற்பாடுகளின் வேகம், தன்மை, போக்கு என்பவற்றை நிர்ணயிப்பதில் அதிகளவூ செல்வாக்கு செலுத்துகின்றனர்.
ஆசிரியர் தொழிலானது ஒரு புனிதமான சேவை என்றும், அறிவூ மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. ஆசிரியரானவர் கற்றலுக்கு உதவூம் வகையில் செயற்படுகின்றார். மனித சமுதாயத்தில் ஆற்றப்படுகின்ற பயனுள்ள பணிகளுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வூகளும் இருக்க முடியாது. அவையாவூம் கௌரவத்துக்குரியவையே. ஆனால் சகல தொழில்களும் வாண்மை நிறைந்த தொழில்களாகி விடமாட்டாது. எனவே வாண்மை நிறைந்த தொழில்கள் என்றால் என்ன எனும் வினா மிக இயல்பாகவே எழுகிறது. ஒரு வாண்மைத் தொழில் பின்வரும் பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.

    சமூக பயன்பாடு,சமூக இயக்கத்துக்கு தொழில் மிகவூம் அவசியமானது.
    அத்தொழில் பற்றிய பரந்த அறிவூத்தொகுதி
    தொழில் தொடர்பான ஒழுக்கக் கோவை
    தொழிலுக்குரிய வாண்மைசார் அமைப்பு
    தொழில் புரிவோர் அர்ப்பணிப்பும் பொறுப்பும் கடமையூம் வகை கூறலும் கொண்டிருத்தல்
    தொழில் புரிவோர் தமது தொழில் சார் அறிவை இற்றைப்படுத்திக் கொள்ளல்
    தொழில் புரிவோர் தமக்குள் தொழில் சார் ஒற்றுமை மற்றும் தோழமை பூண்டிருத்தல்
    தொழில் தொடர்பான தீர்மானங்களை சுதந்திரமாக மேற்கொள்ளல்.

                 தொழிவாண்மை விருத்தி என்பது இன்று சமகால தொழில் முறைமையில் பிரதானமானதும் விளைப்பாடுமிக்கதுமான விடயமாகவே நோக்கப்படுகிறது. இன்று ஆசிரியராக விளங்குவதோடு ஆசிரியருக்கான பயிற்சி என்பது அடிப்படை தேவைப்பாடாக விளங்குகிறது. இதற்கென முறைசார்இ முறைசாரா அமைப்புகளில் பல்வேறு பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணி ஒரு சேவையாகவூம் அதே சமயம் ஒரு தொழிலாகவூம் கருதப்பட வேண்டும் என யூனெஸ்கோவின் ஆசிரியர் உடன்படிக்கை குறிப்பிடுகிறது. ஆசிரியர் பணியினை ஒரு தொழிலாகவூம் சேவையாகவூம் கைகொள்ள வேண்டுமாயின்.

    இடையறாது மேற்கொள்ளும் ஆற்றல்
    பேணப்படும் விசேட ஞானம்
    விசேட திறமைகள் என்பன ஆசிரியருக்கு அவசியம்.

       யூனெஸ்கோ ஆசிரியர் உடன்படிக்கை மூலம் ஆசிரியர் சாசனம் தயாரிக்கப்படுகையில் ஆசிரியர் தொழில்வாண்மையானது ஆசிரியர்களால் பெறப்பட வேண்டிய ஒரு தன்மை என 146 சரத்துகளாலான அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரை 4 வகையாக பிரிக்கலாம்
1.    தொழில்வாண்மை மட்டத்தினை அண்மித்தோர்.
2.    சாதாரண திறமைகளை உடையோர்
3. உதவிகள்,ஆலோசனைகள்இவழிகாட்டல்கள் என்பன அதிகளவூ அவசியமானோர்.
4.    கடுமையான பயிற்சி அளிக்கப்பட வேண்டியோர்.

        தொழில்வாண்மையை அடைய வேண்டுமாயின் தற்போது ஆசிரியர் சேவையில் நிலவூம் நல்ல தன்மைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையூம் நிலவூம் நலிவூகளை பாரியளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையூம் இது எடுத்துக்காட்டுகிறது. ஆசிரியர் தொழிலானது மிகுந்த பொறுப்பு வாய்ந்த பணியெனக் கல்விச் சேவை ஆணைக்குழு குறிப்பிடுகிறது.பொதுவாக ஒரு தொழிலோடு சம்பந்தப்பட்ட உயர்ந்த நிலைமையை அடைவதற்காக 3 விதமான தகைமைகள் அவசியமாகின்றன. மேற்படி விஷேட தேர்ச்சிகளை பெற்றுக்கொள்கையில் வைத்தியத்துறை போன்ற வேறு துறைகளில் ஏற்கப்பட்ட குறிப்பிட்ட சில நிலைபாடுகள் உண்டு.அத்தகைய நிலைபாடுகள் ஆசிரியர் பணியில் இதுவரை கட்டியெழுப்பப்படவில்லை.

            (உ.ம்) பொறியியல் சேவைஇவைத்திய சேவை போன்றவை தொடர்பாக பல்வேறு தகவல்கள் நிமித்தம் பெற்றுக்கொள்ள வேண்டிய விசேட தேர்ச்சிகள் பற்றிய எழுத்து மூலமான அங்கீகாரங்கள் உண்டு.அவ்வாறான விஷேடத்துவங்கள் தொடர்பான ஓர் அங்கீகாரம் ஆசிரியர் சேவையில் கிடையாது.

            பொறியியல் சேவையை பொறுத்த வரையில் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் விதம், அதன் விஞ்ஞான ரீதியான அடித்தளம் என்பனவற்றை நிச்சயமாகவே ஆய்வூ கூடமொன்றில் பரீட்சித்து பார்க்க முடியூம்.அது தொடர்பான பயிற்சியினையூம் பெற இயலும்.ஒரு வைத்தியராக முன்னர் நோய்க்கான காரணங்களை ஆய்ந்தறிதல், உபகரணங்களைக் கையாளும் விதம்இ சத்திர சிகிச்சை செய்யூம் விதம் என்பன தொடர்பான சரியான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற விதத்திற்கேற்பவே சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

       ஆசிரியர் சேவை பயிற்சி இதனை விட வேறுபட்டதாகும். கற்ற விடயத்துக்கும் செய்முறையாக ஆற்றும் விடயத்துக்கும் இடையே சிந்தையில் கொள்ள வேண்டியனவோ ஏராளம். பரீட்சார்த்தங்களில் ஈடுபட நேரிடுவதுண்டு. ஓர் ஆய்வூ கூடத்தில் பெறும் நிபுணத்துவத்தை ஆசிரியரொருவரால் பெறவியலாது.

              ஏனைய சாதாரண தொழில்வாண்மையாளர்கள் போலன்றி ஆசிரியர்கள் பிள்ளைகளோடு பணிபுரிகிறார்கள். பிள்ளைகளோ விரைவாக திருப்தியடையக் கூடியவர்கள், வேறுபாடுகளுக்கு ஆளாகக் கூடியவர்கள்,  வெறுப்படையக் கூடியவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், குறைந்த அனுபவங்களை உடையவர்கள், எண்ணக்கருக்களை ஆட்படுத்திக் கொள்வதில் பல்வேறு மட்டங்களை, அபிவிருத்திப் பருவங்களை வெவ்வேறு விதத்தத்தில் கடக்கும் முதிர்ச்சியடையாத கூட்டத்தாராவர். முன்கூட்டியே மேற்கொள்ளும் தீர்மானத்தோடு மாத்திரம் ஆசிரியரால் செயற்பட முடியாது. எனவே கற்பிப்பவராகவூம், உளவியலாளராகவூம் அவர் செயற்பட நேரிடுகிறது.

          ஆசிரியரது பணி பிள்ளையின் உளச்செயற்பாட்டுடன் தொடர்புறுகிறது. அவர் பெற்றார் போன்று பிள்ளைகளைக் காப்பவர் என்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படுகிறார். ஆசிரியர் பாடசாலையில் தந்தையாக அல்லது தாயாகச் செயற்பட நேரிடுவதுண்டு. அப்பொழுதுதான் மாணவர்களின் உளவியல் ரீதியான விடயங்களை ஒரு ஆசிரியர் என்ற வகையில் அறிய முடியூம். வகுப்பில் நாற்பது பேருக்கு தாயாகும் போது முகங்கொடுக்கும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளில் உளத்தாக்கம் ஏற்படாத விதத்தில் செயற்படல் ஆசிரியரது பணியாகும். உளவியல் சார்ந்த இந்த அடித்தளம் வேறு எந்தவொரு தொழிலிலும்; அவ்வளவூ செல்வாக்கு செலுத்துவதில்லை. ஆசிரியரது தொழில்வாண்மைக்குரிய விசேடமான தரக்கட்டுப்பாடுகள், நல்லொழுக்கங்கள் என்பன வற்றை எதிர்காலத்தில் நாம் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும். அதனை எம் சிந்தையில் கொண்டு அதனை ஈட்டிக்கொள்ள முனைதல் வேண்டும்.

       இதன் பிரகாரம் ஆசிரியர் தொழில் வாண்மையில் பிரவேசித்தல் அவசியம்.ஆசிரியர் தொழிலை தெரிவூ செய்யூம் ஒருவர் அவ்விதம் முனைந்து தொழில்வாண்மையை அடைந்து கொள்ளலாம். இதன் மூலம் இலங்கையின் ஆசிரியர் தொழில் வாண்மை பொருந்தியதாக அமையூம்.

             கல்வியினை எவ்வாறு எம்மால் இலகுவாகப் பெற முடியூம் என்பதனைச் சுட்டிக்காட்ட ஒரு சிறந்த வழிகாட்டி அவசியமாகும். இவ்வாறான வழிகாட்டி வாண்மைமிக்க ஆசிரியர் ஆவார்.  வாண்மை என்பது ஒரு குறித்த துறை தொடர்பான சிறப்பான அறிவூம் சுதந்திரமாக செயற்படும் திறனும் எதனையூம் தயங்காமல் பொறுப்பேற்கும் ஆற்றலுமாகும். எனவே இம்மூன்று அம்சங்களும் எந்த ஆசியரிடம் நிறைந்து காணப்படுகின்றதோ அவரே வாண்மைமிக்க ஆசிரியராவார். வாண்மையாளர்கள் தாம் மேற்கொள்ளும் தொழில் துறையில் சிறப்பான ஆற்றலும் நிறைவான தேர்ச்சியினையூம் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு சாதாரண மனிதனின் இயலுமைக்கு அப்பாற்பட்டவைகளே வாண்மைத் துறைகளாகும். எனவே வாண்மையாளர்கள் சாதாரணமானவர்களாக அல்லாமல் 'நீண்ட காலப் பயிற்சிகளோடு சிறப்புத் துறையில் சேவையாற்றுவதோடு ஆய்வூ அடிப்படையிலான அறிவூத் தொகுதிகளை விளங்கிக் கற்பதற்கான வாய்ப்பும் கற்றுக் கொண்ட அறிவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் திறனையூம் பெற்றிருக்க வேண்டும்.'

               கல்வியானது தனியாள் விருத்திக்கும் சமூக விருத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவதால் அது தொடர்பாக தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு தனியாள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் கற்பதும் அவ்வாறு கற்ற அறிவினை வாழ்க்கையினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தல் வேண்டும். இச்செயற்பாட்டிற்கு ஆணிவேராகத் திகழ்பவர்கள் ஆசிரியர்களாவர்.

          சிக்கலான இப்பணியினை நிறைவூ செய்வதற்கு ஆசிரியர்களிடம் வாண்மை தொடர்பான உயர் நிலைத் தேர்ச்சி தேவைப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் இப்பணியினை செய்பவர்ளக்குரிய தேர்ச்சியைப் பெறும் போது ஆசிரியர்களால் தம்மிடம் கற்க வரும் இளம் தலைமுறை யினரை உரியவாறு தயார் செய்ய முடியூம் எதிர் காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலோடு எதிர் கொள்ளவூம் அவர் களின் கற்றலை இலகுள்ளதாக்குவதற்கும் அவர்களின் கற்றலுக்கு அவர்களையே பொறுப்புடையவர்களாக்கும் பணியூம் ஆசிரியரின் வாண்மை விருத்திலேயே தங்கியூள்ளது.

         ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தியடையச் செய்யூம் முகவர்களாவர். இவர்களே மாணவர் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையூம் ஏற்படுத்த முடியூம். ஆசிரியர்கள் மாணவர் களிடையே கற்றல் தொடர்பான ஆர்வத்தையூம் சுதந்திர உணர்வையூம் உயர் சிந்தனை ஆற்றலையூம் விருத்தி செய்ய முடியூம். இங்கு முறைசார் கல்வியினை பிரயோகிப்பவர்கள் ஆசிரியர்களாவர். எனவே முன் குறிப்பிட்ட தேர்ச்சிகளை மாணவர் மத்தியில் உருவாக்க ஆசிரியர் வாண்மையில் உரிய பங்கு கொடுக்கப்பட வேண்டும்.

       மாறும் உலகில் பணியாற்றும் ஆசிரியர்கள் சர்வதேச வர்த்தமானங்களுக்கு உரியவாறு தமது வாண்மையை விருத்தி செய்வது முக்கியமானதாகும். எனவேதான் இன்றைய கல்வியில் தொடருறு கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தாம் பெற்ற கடந்த கால அனுப வங்களை வைத்துக் கொண்டு தற்கால கல்வித் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனெனில் மாறிவருகின்ற நவீன உலகிற்கு தக்க வகையில் தம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் வாண்மைமிக்க ஆசிரியர்கள் சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  நேர்த்தியான உடை நடையூம் மனவெழுச்சி உறுதிப்பாடு அதிகமுள்ளவரும்
  எப்போதும் கரிசணையூடனும் சுறுசுறுப்புடனும் செயற்படும் ஆற்றல்.
 தமது பாடத்தினை மட்டும் கற்பிக்க போதுமான அறிவூ இல்லாமல் பரந்த அறிவூ கொண்டவர்.
 சுய ஒழுக்கக் கட்டுப்பாடும் மாணவரது ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிக   ஆர்வம் காட்டுபவரும்.
 கற்றல் கற்பித்தல் செயன்முறையின் தர மேம்பாட்டிற்காக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்.
 ஆக்கத்திறன் மிக்கவரும் தமது பணியினை கடமை தவறாமல் செய்பவரும்.
 தமது கருத்திற்குள் மாத்திரம் நிற்காமல் நெகிழ்ச்சியாக சகல கருத்துக்களையூம் வரவேற்கக் கூடியவர்.
    நேர முகாமைத்துவமும் மத சிந்தனையூம் உடையவர்.
    பிரச்சினைகள் இடர்பாடுகளின் போது பொறுமையாகச் செயற்படுபவர்.
    சாதாரணமானவர்கள் போல் அல்லாமல் பரந்த நோக்குடையவர்.
 மாணவர் மையக் கற்றல், கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரையூம் குறைந்தபட்ச அடைவூக்கேனும் இட்டுச் செல்ல முற்படுபவர். 

     காலத்துக்குக் காலம் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக கல்வியானது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வகை மறுசீரமைப்புக்களால் மக்கள் பெரும் அடைவூகளை எதிர்பார்க் கின்றனர். பாடசாலையூம் ஆசிரியர்களும் தரம் நோக்கிய வகையில் ஏற்படும் முன் னேற்றம் தொடர்பாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைப்பில் ஈடுபடும் உயர் நிலை அதிகாரிகளான திட்டமிடல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியியலாளர்கள் போன்றவரின் கருத்துப்படி 'பயனுறுதியூள்ள மாணவர் கற்றல், கலைத்திட்ட அமுலாக்கல் பாடசாலை தொடர்பான முழுமையான முன்னேற்றம் ஆகியவை தொடர்பாக ஆசிரியர்களே முக்கிய பங்காற்ற வேண்டும் என நம்பப்படுகிறது.

             இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மறுசீர மைப்பில் ஆசிரிய வாண்மை விருத்தி தொடர்பாக அதிக அளவூ அக்கறை காட்டப் படுகின்றது. இலங்கையில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பிலும் கூட ஆசிரியர் தொழில்சார் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆசிரிய வாண்மை விருத்தியை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிப்பது பொருத்தமானது.

        ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர் முன்சேவைப் பயிற்சி அல்லது தொடக்க நிலைப் பயிற்சி எனப்படும். ஆசிரியர் தொழிலில் இருக்கும் போது வழங்கப்படும் தொழில் வாண்மைப் பயிற்சி தொடருறு ஆசிரியர் பயிற்சி அல்லது சேவைக்காலப் பயிற்சி எனப்படும். இவ்விரு வகைப் பயிற்சிகளையூம் வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது ஆசிரிய வாண்மை விருத்தியாகும். இவ்வாறு பயிற்சி பெறம் ஆசிரியர்கள் மேற் குறிப்பிட்ட பண்புகளையூம் கொண்டிருக்கும் போது அவர்களையே வாண்மை விருத்தியூள்ள ஆசிரியர்கள் என வர்ணிக்கலாம்.

      வாண்மைமிக்க ஆசிரியர் ஒருவரின் வகுப்பறையானது மிகவூம் சந்தோஷமானதாகவூம்இ ஆரோக்கியமானதாகவூம் மன அமைதி நிறைந்த ஒரு இடமாகவூம் காணப்படல் வேண்டும். ஏனெனில் குடும்பச் சூழலை விட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் கிடைக்கின்ற சந்தோசம், அமைதி போன்ற அனைத்துத் தேவைகளும் பூரணமாக முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது போலவே ஆசிரியர்கள் குடும்பத்தவர்கள் கவனிப்பதை விட சிறப்பான முறையில் மாணவர்களைக் கவனிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் போது ஆசிரியர்களின் அபிவிருத்தியானது படிப்படியாக அதிகரிக்கும் அத்துடன் தொழிற்தகைமை என்பது ஏற்படுகின்றது.

          சாதாரணமாக இன்று ஆசிரியர் தொழிலானது வெறுமனே வியாபார நோக்கில் செல்வதனை நாம் காணலாம். அதாவது தொழில் என்ற வகையில் பாராது இதனை ஒரு சேவையாக செய்வோர் எம்மத்தியில் மிகவூம் குறைவாகும். இதற்கு அடிப்படையில் தொழில்கள் என்ற அடிப்டையில் பாரபட்சம் காணப்படுவதும், ஆசிரியர்களின் தொழில் ரீதியான கல்வி தகைமை போன்ற விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றது. ஒரு பாடசாலையினை எடுத்துக்கொண்டால் அங்கு ஆசிரியர்களிடையே பல்வேறு விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்இ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் என்ற வகைப்பாடுகளில் இருக்கின்றார்கள். இதன் காரணமாக இவர்கள் மத்தியிலே போட்டி, முரண்பாடு தன்மைகள் அதிகரித்து இறுதியில் பாடசாலையின் அபிவிருத்திக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

       ஆசிரிய கல்வியை புதிதாக வடிவமைக்க வேண்டியதொரு தேவையூள்ளது. பாடசாலை மட்டத்திலான ஆசிரியர் வகிக்கும் பங்கினை மாற்றியமைக்க வேண்டியூள்ளது. தேசிய கல்வி அபிவிருத்திக்கான ஆசிரியர்களின் புதிய பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்வது பற்றி தேசிய கல்வித் திட்டமிடல் ஊடாக அதிகளவூ கவணம் செலுத்தப்படும் போது பாடசாலையின் அபிவிருத்தி என்பது நீண்டகாலத்தினை கொண்டதாக அமையூம். குறிப்பாக புதிய சட்டதிட்டங்களை தயாரிப்பதும்இ புதிய ஒழுங்கமைப்புடன் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை முகாமை செய்வதும், ஆசிரியர் தொடர் கல்வியில் ஈடுபாடு காட்டக் கூடியதான பொருளாதார நலன்களை முன்னேற்றுவதும் அவசியமாகும். இவை எல்லாவற்றையூம் உள்ளடக்கியதான ஆசிரியதிட்டம் (Teacher Plan) தயாரிக்க வேண்டும். இதன் பின்னர் பல நிலைகளிலும் ஆசிரியர்கள் தமது அபிவிருத்தியினை முன்னெடுத்து செல்வதற்கு வாய்ப்பாக அமையூம்.

          ஆசிரியர்களை பொருத்தமட்டில் கற்பித்தலுக்குரிய தேர்ச்சிகளை ஆகக் குறைந்த அளவூக்கேனும் மாணவர் பெறுவதை உறுதிப்படுத்துவது மிகவூம் அவசியமான ஒன்றாகும். பொதுவாக உலகரீதியில் கல்வி ஒரு பண்டமாக அங்கீகரிக்கப்பட்டு கல்வித் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு வருகின்து. ஆசிரிய கல்வியினூடாக அவர்கள் பெறுகின்ற தகுதியை மிகவூம் வலுவான முறையில் அங்கீகாரம் செய்தல் வேண்டும். பாடசாலைகளை பொருத்தளவில் தகுதிமிக்கவர்கள் மாத்திரம் ஆசிரியத் தொழிலில் நுழைவதை நிச்சயித்தல் வேண்டும். அத்தகு உயர் தகுதியூடையவர்களை ஈர்த்துக் கொள்ளத்தக்கதாக கவர்ச்சி மிக்க சம்பள அளவூகளையூம் நிர்ணயிக்கும் போது ஆசிரியர்களின் தொழில்சார் விருத்தி ஏற்படும் அதேவேளை பாடசாலையினதும் அபிவிருத்தி என்பது அதிகரிக்கின்றன.

            நிலைமாற்ற வகிபாக  (Transformation Role) நிலையினை இன்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றமையானது அவர்களது தொழில்வாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றது.  பூகோளமயமாக்கலின் காரணமாக நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குச் சிறப்பான வகிபாகமாக நிலைமாறு வகிபாகம் விளங்குகின்றது. ஆசிரியருக்குப் பதிலாக மாணவனையூம் கற்பித்தலுக்குப் பதிலாகக் கற்றலையூம் வலியூறுத்துவதாக இது அமைந்திருக்கும். நிலைமாற்ற வகிபாகத்தின் இறுதிப் பேறாக விளங்குவது தேர்ச்சிமட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள தேர்ச்சிகளை  அடைவதாகும். இதனூடாக மாணவர்களின் சுயதிறன் விருத்தி செய்யப்படும். இங்கு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான நேரம் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இங்கு ஆசிரியாpன் பணியாக விளங்குவது மாணவர்கள் அறிவைத்தேடி நகர்ந்து செல்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். ஆசிரியரானவர் ஓர் வளவாளராகச் செயற்படுவதோடு கற்பதற்கான சுதந்திரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பவராகவூம் விளங்குகின்றார். 

      ஆசிரியர்கள் மத்தியில் கட்டாயமாக தமது தொழில் தொடர்பான தௌpவினையூம் நிலைப்பாட்டையூம் கொண்டவராக இருத்தல் வேண்டும். தமது பாடசாலை மட்டங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் போன்ற செயற்பாடுகளில் பங்களிப்பினை வகித்தல் வேண்டும். பாடசாலையில் ஆசிரியரின் முக்கியமான செயற்பாடாக கற்பித்தல் பணியே காணப்படுகின்றது. இங்கு இடையூறுகள் ஏற்படும் போது இறுதியிலே மாணவர்களே பாதிப்படைவார்கள். ஆகவே ஆசிரியர்கள் தமது தொழில் தொடர்பான விடயங்களில் ஆர்வத்தினை செலுத்தும் போது அவை பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வியினை பாதிக்காத வகையில் தொழில்வாண்மை என்பது காணப்படல் வேண்டும்.

Visvalingam Prashanthan
Dept of Education & Child Care  
Faculty of Arts & Culture
Eastern University, Sri Lanka
9471 3142200, 9475 2354616 & Prashan002@gmail.com
Web - https:www.prashanthan002.blogspot.com   
Facebook - https://www.facebook.com/visvalingam.prashanthan
Twitter - https://twitter.com/prashanthan002

Linkedin - https://lk.linkedin.com/.../visvalingam-prashanthan


No comments:

Post a Comment