Sunday, March 1, 2015

அணிமுறை கற்பித்தல்

அணிமுறை கற்பித்தலை மேற்கொள்வதை பாடசாலையில் எவ்வாறு திட்டமிட்டு அமுலாக்கலாம். இன்றைய நவீன கற்பித்தல் முறைகள் கற்பித்தல் கலாசாரத்திலிருந்து கற்றல் கலாசாரத்திற்கும் பாடசாலையிலிருந்து தேர்ச்சி தழுவிய மாணவ மையத்திற்கான வழிகளைக் காட்டி நிற்கின்றது.
ஆசிரியர்கள் எல்லோரும் எப்பொழுதும் வெற்றிகரமான கற்றல், கற்பிதத்தல் நுட்பங்களை பிரயோகிப்பதற்கு தாம் பெற்ற அனுபவங்களிலிருந்து புதிய உத்திகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு நவீன கணீப்பீட்டுக் தேர்ச்சிகளை மாணவர்கள் அடைய புதிய வழிகளையூம் காண வேண்டியிருக்கின்றது. இந்த வகையில் புதிய கற்பித்தல் முறைகள் வழியமைத்து கொடுத்துள்ளது என்று குறிப்பிடலாம். குறிப்பாக இன்றைய நவீன கற்பித்தல் முறையானது மாணவர்களின் மையக்கல்வியை அடிப்படையாக கொண்டது.


பொதுவாக இன்று அணிமுறை கற்பித்தல் முறையானது இடைநிலை வகுப்புகளுக்கு அதிகம் பொருத்தம் உடையதாக காணப்படுகின்றது. அணிமுறை கற்பித்தல் என்பது ஒரு பாடத்தின் பண்முக தேர்ச்சிகளையூம், மாணவர்கள் ஒரே நேரத்தில் அடைதல் பொருட்டு ஆசிரியர் அணியினரால் (இரண்டு அல்லது மூன்று பேர்) வழங்கப்படுகின்ற ஒரு கற்பித்தல் முறை அணிமுறை கற்பித்தலாகும். வெவ்வேறு துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசியரியர்களால் ஈடுப்படுவதால் பாடத்தின் கூறுகளை பிள்ளைகள் தெளிவாக கற்றுக் கொள்வதுடன், கற்றலில் கவர்ச்சி கரமான உத்வேகத்தினை பெற்றுக்கொள்வார்கள் என்பது இக்கற்பித்தல் முறையின் சிறப்பு அம்சமாகும். அதாவது ஒரே தரத்தில் உள்ள சமாந்தர வகுப்பு மாணவர்களை ஒன்று சேர்ந்து குழுக்களாக்கி, ஒரு பாடத்தின் பல பகுதிகளை பல ஆசிரியர்களால் கற்பிப்பது இடம்பெறுகின்து. இங்கு பல ஆசிரியர்கள் ஒரு ஆசிரியரின் கீழ் ஒன்றினைந்து திட்டமிட்டு கற்பிக்கின்றமை முக்கியமான விடயமாக அணிமுறை கற்பித்தல் என்பது காணப்படுகின்றது.

அணிமுறை கற்பித்தலின் கீழ் பாடத்தின் அம்சங்கள் கற்பிக்க வேண்டிய விடயத்தின் தலைப்புக்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்துதல் போன்றன தொடர்பில் ஆசிரியர்கள் தீர்மாணித்து கொள்ள வேண்டும். இதற்கென பொருத்தமான தீர்மாணத்தினை எடுப்பதற்கான அனுபவமிக்க ஒரு ஆசிரியரின் தலமையின் கீழ் குழுமுறைஇ கலந்துரையாடல் முறைஇ விவாத முறைஇ செயற்றிட்டமுறை போன்ற பல முறைகளில் பயன்படுத்தலின் ஊடாக அணிமுறை கற்பித்தல் சிறப்பாக மேற்கொள்ளலாம். குறிப்பாக எமது பிரதேசத்தில் ஆசிரியரின் பற்றாக்குறைஇ ஆசிரியர்கள் லீவூ எடுத்தல் முறையினை இக்கற்பித்தல் முறையில் அதிகளவூ பயன்படுத்தலாம். இக்கற்பித்தலானது ஆசிரியர்களின் செயற்பாட்டிற்கு அதிகளவூ உதவ கூடிய கற்பித்தல் முறையாகும்.

நவீன கற்பித்தல் முறைகள் குறித்து ஓர் ஆசிரியர் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தல்இ கற்பித்தலின் விளைவாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வினைத்திறன் மிக்க கற்பித்தலை வகுப்பறையில் முன்னெடுத்தல் போன்றவற்றுக்கு நவீன வகுப்பறைக் கற்பித்தல் முறைமைகள் குறித்த அறிவூ மிக மிக இன்றியமையாததாகும். அவ்வாறே மறுபுறத்தில் ஓர் ஆசிரியர் கற்பித்தல் குறித்த அறிவினை விருத்தி செய்து கொள்ளாமல் தொடர்ந்தும் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடுவது மாணவர்களிடத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை துரிதப்படுத்தும் ஒரு காரணியாகவூம் வினைத்திறனற்ற வகுப்பறைக் கற்பித்தல் காணப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களது பெறுபேறுகளின் வீழ்ச்சி நிலைக்கும் இத்தகைய வினைத்திறனற்ற கற்பித்தலே பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றது.

ஆசிரியர் தொழில் என்பது சீரிய சமூக உருவாக்கத்தின் முதுகெலும்பாகக் காணப்படுகிறது. இந்தக் கற்பித்தலை எந்தளவூக்கு வினைத்திறனுள்ள முறையில் ஆசிரியர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதில்தான் அந்த சேவையின் புனிதத் தன்மையூம் தங்கியூள்ளது. வகுப்பறையில் ஆசிரியரின் பிரதான பங்கு கற்பித்தலாகும். எனவே வகுப்பறையில் எப்படி வேண்டுமானாலும் கற்பிக்கலாம் எனும் நிலைமையிலிருந்து விடுபட்டு ஒரு பாடத்தை எந்த வழிமுறையில் முன்வைத்தால் அதன் உச்சப் பயன்பாட்டைப் பெறலாம் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். இந்த கற்பித்தல் முறைமைகள் குறித்த நவீன திட்டமிடலுக்குத் தேவையான சில கற்பித்தல் அமைப்புக்களை இங்கே விளங்கிக் கொள்வதுடன் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையூம் அவதானிப்போம்.

நவீன கற்பித்தல் முறைகளை பின்வருமாறு சுருக்கமாக பார்க்கலாம்.
01. தனியாள் கற்பித்தல் முறைகள்
    விரிவூரை முறை
    வினவூதல் முறை
    கலந்துரையாடல் முறை
    செய்து காட்டல் முறை
    சிந்தனைக் கிளறல் முறை
    நாடகமாக நடித்தல் முறை
    நுண்முறைக் கற்பித்தல் முறை
    விளையாட்டு முறை

02. குழுவாகக் கற்பிக்கும் முறை
    அணிமுறைக் கற்பித்தல் 
    போல அமைத்துக் கற்கும் முறை
    பிரச்சினை தீர்த்தல் முறை
    செயற்திட்ட முறை
    கண்டுபிடித்துக் கற்கும் முறை

மேற்படி கற்கும் முறைகளுள் கண்டுபிடித்துக் கற்கும் முறை பிரச்சினை தீர்த்தல் முறை, செயற்திட்ட முறை மற்றும் போல அமைத்துக் கற்கும் முறை போன்றன தனியாகவூம் குழுவாகவூம் கற்கும் முறைகளாகும். மாணவர்களின் நிலைக்கும், அறிவூக்கும் ஏற்றவாறு கற்பித்தலை அமைத்துக் கொள்ளல் மாணவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் உள்ளவராக இருக்கக் கூடும். எல்லோராலும்இ எல்லாவற்றையூம் எப்போதும் புரிந்து கொள்ள முடியூம் என்று கூற இயலாது. மாணவர்களின் நிலைக்கும்இ அறிவூக்கும் ஏற்பவே அவர்களால் புரிந்து கொள்ள முடியூம். ஓர் ஆசிரியர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் என்பதற்காக அவரது திறமைகளை மாணவர்கள் அனைவர் மீதும் திணித்து விட முடியாது. பாத்திரத்தின் கொள்ளவூதான் கொடுக்க முடியூம். பாத்திரத்தின் அளவூக்கு அதிகமாகக் கொடுத்தால் அது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியூம்.

மாணவர்களின் நிலை, வயது, தரம், முதிர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், பக்குவம் ஆகிய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் திறன் அறிந்து செயல்பட வேண்டும் என்ற முறையானது இக்கற்பித்தலில் அமந்துள்ளது. கேள்விகள் மற்றும் விவாதங்கள் மூலமாக புரியவைத்தல் கற்பித்தல் முறைகள் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வூ சமீபகாலமாக மிக அதிகமாகவே காணப்படுகிறது. மாணவர்களை மனனம் செய்ய வைத்து பரீட்சை எழுதவைத்தல் என்ற முறை மாற்றப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான பாடசாலை நடமறையில் காணப்படுகின்றது.

செயல்வழிக் கற்றல் என்ற பாட முறைகள் தற்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு சகலரிடையேயூம் விருப்பமானதாக மாறி வருகிறது. இந்த நவீன யூகத்து கண்டுபிடிப்புகள், பயிற்சி முறைகள் எல்லாமே 1400 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஓர் ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை முழுமையாக மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய பயனுள்ள முறையே வினாக்கேட்டல் மற்றும் விவாதங்கள் மூலமாகப் புரிய வைக்கும் முறையாகும். ஒருதகவலை சாதாரணமாக தெரிவிப்பதை விட அது சம்பந்தமான கேள்விகள் மற்றும் விவாதங்களை எழுப்பி அத்தகவலைத் தெரிவித்தால் அது நெஞ்சில் மறக்க முடியாதளவூ பதிந்து விடும். வினாக்களையூம்இ விவாதங்களையூம் எழுப்பி சிந்தனையைக் கிளறி விடுவதே இம்முறையின் நோக்கமாகும்.

 உதாரணங்களை பயன்படுத்தி விளக்குதல் விளங்குவதற்கு கடினமான சில விஷயங்கள் கூட எளிய நடைமுறையில் காணப்படக் கூடிய உதாணரங்களைக் கொண்டு விளக்கப்படும் போது சுலபமாக புரிந்து விடுகின்றது. ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறு சிறு உதாரணங்களைக் கொண்டு விளக்கும் ஆசிரியர்கள் சிறந்தஇ மாணவர்களுக்கு மிக விருப்பமான ஆசிரியர்களாக இருப்பர். வகுப்பறையூம் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். அணிமுறை கற்பித்தலானது இனி எக்காலத்திலும் இந்தத் தீர்வை யாருமே மறக்க முடியாத அளவூக்கான மிகச் சிறந்த ஒரு கற்பித்தலாக இது அமைந்தள்ளது. மக்களின் அடிப்படை வாழ்வில் அவர்களோடு ஒன்றாய்க் கலந்துவிட்ட ஒன்றை அம்மக்களுக்கு உதாரணமாகக் கூறும்போது அது எளிதில் உள் வாங்கிக் கொள்ளப்படுகின்றது. “ஒருவருக்கொருவர் நேசிப்பதிலும், அக்கறை கொள்வதிலும், இரக்கம் கொள்வதிலும் முஃமின்களுக்கிடையேயான உதாரணமாவது ஓர் உடம்பைப் போன்றதாகும்.
இதில் வெவ்வேறு துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஈடுபடுவதால் விடயக் கூறுகளை பிள்ளைகள் தௌpவாகக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைகின்றது. 

இதன் படி.
1.    பாட அலகின் துறை வாரியான தேர்ச்சிகளை நிர்ணயித்தல்.
2.    துறைவாரியாக ஆசிரிய அணியினரை தெரிவூ செயதல்.
3.  துறைவாரியாக கற்றல்இ கற்பித்தலைத் திட்டமிடல் (குழுக்களாகவூம், முழுவகுப்பாகவூம் கற்பித்தல் மேற்கொள்ளப்படலாம்.
4. கற்றல், கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய ஆசிரிய அணியினரை பாடசாலை குடும்பத்திலிருந்து ஒழுங்கு செய்யலாம்.

பொதுவாக இக் கற்பித்தல் முறையில் வெவ்வேறு துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஈடுபடுவதால் பாடத்தின் கூறுகளை பிள்ளைகள் தௌpவாகக் கற்றுக்கொள்வதுடன் கற்றலில் கவர்ச்சிகரமான உத்வேகத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அதாவது உதாரணமாக ஒரு பாடத்தை எடுத்து நோக்கினால் அந்த பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கற்பிப்பர். அதாவது விஞ்ஞானப் பாடத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் இப் பாடத்தை கற்பிப்பதன் மூலம் இதனை சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள முடியூம்.

    எமது பிரதேசத்திலும் ஆசிரியர் பற்றாக்குறைஇ ஆசிரியர் லீவூ எடுக்கும் சந்தர்ப்பங்கள் என்பன மிக அதிகமாக காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை விட பாடசாலைகளில் அளவூக்கு அதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் இதனை மேற்கொள்ள முடியம். குறிப்பாக ஒரு பாடசாலையில் ஆங்கிலம்இ கணிதம்இ விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கே அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை என்பது காணப்படுகின்றது. இந்த பாடங்களுக்கு திறமையான ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் அவர்களின் நியமன முறைகளில் பின்வாங்கப்படுகின்றகார்கள். குறிப்பாக மாணவர்களை இணைத்து ஒரு பாடத்தில் பல பகுதிகளை பிரித்து அவர்களுக்கு தேர்ச்சியான பகுதிகளை வகுப்பறையில் கற்பித்தலுக்கு உற்படுத்தலாம். எனவே இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக ஓரளவூ ஆசிரியர் பற்றாக்குறை என்பதனை தீர்க்க முடியூம்.

ஒரு பாடசாலையில் அணிமுறை கற்பித்தல் முறையினை செயற்படுத்துவதில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என்பது மிவூம் அவசியமாகும். அந்த வகையில் இவ்வகையான கற்பித்தலை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் அட்டவணையை தயாரித்தல்இ பாட அட்டவணையானது இதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு தயாரிக்கபட்டால் மட்டுமே சிக்கலின்றி ஒழுங்கான முறையில் இக்கற்பித்தல் முறையினை நடைமுறைப்படுத்த முடியூம். இன்று பொதுவாக தூர பிரதேசங்களிலிருந்து பாடசாலைக்கு வருகின்ற ஆசிரியர்களிடையே லீவூ எடுத்தல் மற்றும் தாமதமாக வருகின்ற செயற்பாடுகள் காணப்படுகின்றது. இங்கு ஆசியர்கள் சரியான நேரத்திற்கு வருகை தர முடியாத ஒரு நிலமையூள்ளது. எனவே இதற்கு ஏற்ற வகையில் இவர்களுக்கும் அணிமுறையிலான கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அப்பொழுது தான் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தமது கற்பித்தல் மறையினை மேற்கொள்ளலாம்.

ஒரு பாடசாலையில் ஒரு பாடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் காணப்படுகின்ற வேளையிலும் இக்கற்பித்தல் முறையினை மேற்கொள்ள முடியூம். அதாவது இவ்வகையில் சரியான முறையில் இதனை மேள்கொள்கின்ற போது மாணவர்களுக்கு ஒழுங்கான முறையில் பாத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். உதாரணமாக ஒரு பாடசாலையில் கணிதப் பாடத்திற்கு 03 ஆசிரியர்கள் காணப்படுகின்ற போது இவர்களின் பாடவேளைகள் குறைவாகவே காணப்படும். இப்பாட வேளைகளை சரியான முறையில் கொண்டு செல் வதற்கு ஏற்ற வகையில் நேர அட்டவணைகளையூம்இ பாட ஒழுங்குகளையூம் திட்டமிட்டு அமுலாக்க முடியூம்.

அணிமுறைக்கற்பித்தலானது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையினை இலகுவாக்குகின்றது. அதாவது பிரத்தியேக நேரங்களை ஒதுக்கி பிரத்தியேகமாக இவ்வகை கற்றல் கற்பித்தல்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக காலையில் நேரம் தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு காலையில் முதலாம் பாடவேளையை வழங்காது அதற்கு மாற்றீடாக பிரத்தியேக நேரங்களில் இவ்வகையான முறைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியூம்.

ஒரு பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை. கல்வி நிலையில் மாணவர்கள் பின்தங்கி காணப்படுதல் போன்ற நிலைகளை ஓரளவூ நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் அணிமுறைக் கற்பித்தலானது அமையப்பெறுகின்றது.  பொதுவாக நோக்குகின்ற போது இம்முறையானது இடைநிலை பிரிவூ மாணவர்களுக்கு பொருத்தமானதாக அமைவதோடு அணிமுறைக் கற்பித்தலானது சிறந்த வகுப்பறைச் சூழலை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.

By: V.Prashanthan
Dept of Education & Child Care
Eastern University, Sri Lanka. 
prashan002@gmail.com 0713142200 & 0752354616

No comments:

Post a Comment