Tuesday, March 24, 2015

செயற்றிட்ட கற்பித்தல் முறை (Action  Learning Method)


          கற்பித்தல் முறைகளில் இன்று அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக செயற்றிட்ட முறையானது (Action  Learning Method) காணப்படுகின்றது. செயற்றிட்ட முறையானது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான தீர்வை செயற்பாடு முறையாக தேடிப்பெறுவதன் அடிப்படை பண்பாக இருக்கும்.
இவ் செயற்றிட்ட கற்பித்தல் முறையினை “கீல் பெற்றிக்” என்பவர் 1918ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். செயல்வழி கற்பித்தல் முறை என்பது ஒரு பிரச்சினையை இனங்கண்டு தீவூக்காகத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவூகளை அறிதலும் ஆகிய செயன்முறைகளைக் கொண்ட சுழற்சிப்படிமுறையாகும். (Kurt Lewin 1943). குறிப்பாக பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கருத்துள்ள செயற்றிட்ட செயற்பாட்டினை முன்னெடுப்பதாகும். இங்கு நோக்கமானது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றதோடு கருத்துள்ள செயற்பாடாகவூம் அமைந்திருக்க வேண்டும்.

           செயலும் ஆய்வூம் இணைக்கப்படும் போது செயல் என்பது ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணையாகிறது. இதன் மூலம் நடைமுறையை விளங்கி விருத்தி செய்து சீர்திருத்துவதற்கு மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட முயற்சியே செயல்வழி கற்பித்தலாக அமைகின்றது. (Hopkins 1985). செயல்வழி கற்பித்தல் என்பது ஆய்வூக்கும் நடைமுறைக்கும் இடையிலுள்ள தூரத்தினைக் குறைப்பதாகும். இதன் மூலம் நடைமுறையில் தாக்கம் செலுத்துவதற்கு ஆய்வினால் முடியாதிருக்கும் நிலையினைக் குறைக்க முடியூம். (Somekh 1995). செயல்வழி முறை என்பது ஒருவகையான சுயபிரதிபலிப்புச் சிந்தனை விசாரணையாகும். சிறிய அளவிலான செயற்பாட்டுக் கண்டுபிடிப்பே செயல்நிலை கற்பித்தலாகும்.

                 உதாரணமாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பாடத்தினை மையமாகக் கொண்ட செயற்பாடாகக் கொண்ட செயற்பாடாக காணப்படுகின்றது. இங்கு வானிலை மாற்றமான வெறுமனே பாடப்புத்தகத்தில் உள்ளதை வைத்துக்கொள்ளாமல் தேடி செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இம்முறையானது பிரதானமான ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது ஒரு பாடசாலை வகுப்பறை செயற்பாட்டில் செயற்றிட்டத்தினை மையமாகக் கொண்ட செயற்பாடு பிரதான ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது செயற்பாடுகள் யாவூம் ஏதாவது ஒரு கற்றல் குறிக்கோளினை அடிப்படையாகக் கொண்டமையூம் பிரதான விடயமாகும். உதாரணமாக பரிசோதனைகள் அதிகமாக இன்று விஞ்ஞானப்பாடத்தில் பயன்படுகின்றது.

              செயற்றிட்ட கற்பித்தல் முறையானது அதிகளவூ மாணவர்களை மையமாக் கொண்டவொரு கற்பித்தல் விடயமாக அமைகின்றது. இதிலே செயற்பாடுகள் என்பன நடைமுறையூடன் தொடர்புப்பட்டதாக காணப்படும். குறிப்பாக கருத்துள்ள, உயிர்ப்புள்ள யதார்த்தமான செயற்பாடுகளாக அமையூம். அதாவது இங்கு அதிக பிரச்சினைகளை யதாரத்த நிலையோர் பார்க்கின்ற போது அது உயிர்ப்புள்ள ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. கற்பித்தல் முறையில் செயற்பாடுகள் யாவூம் மாணவர்களினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
செயல்வழி கற்பித்தலானது பின்வரும் பண்புகளை வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

  • அறிவூப் புலத்தினை மேலெழச் செய்ய முடியூம்
  • கோட்பாட்டிற்கும் பிரயோகத்திற்குமான இடைவெளியினைக் குறைக்க முடியூம்
  • ஆசிரியரின் வான்மை விருத்திக்குதவூம்
  • தரவட்டங்களைக் கட்டியெழுப்ப உதவூம்
  • ஆய்வாளனின் அறிவூக்கேற்பக் கட்டியெழுப்ப முடியூம்.
  • ஆசிரியருக்குப் பயிற்றுவிக்கப் பொருத்தமான முறையாகும். 
  • கூடியளவூ இம்முறையில் ஆசிரியருக்கு வலுவூட்டலாம்

      கீழ் நிலையில் மாற்றத்தினையூம் முன்னேற்றத்தினையூம் ஏற்படுத்துவதற்கான பலம்வாய்ந்த கருவியாக செயல்நிலை கற்பித்தலானது அமைகின்றது. இச் செயல்நிலை கற்பித்தல் முறையானது பல்வேறு பரப்புக்களில் மேற் கொள்ளக் கூடியதாவூள்ளது.

உதாரணமாக …
    கற்பித்தல் முறை - மரபாh;ந்த முறைக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடிய புதிய முறை தொடர்பில் நோக்குவதற்கும்
    கற்றல் தந்திரோபாயங்களின் போது – போதனைக்குப் பொருத்தமான அணுகு முறைக்காகவூம்
    வாழ்வின் சிலபாpமானங்களுக்காக – ஏற்கத் தக்க விழுமியங்களைப் பதித்தல் அல்லது திருத்தியமைத்தல்
    வாண்மை விருத்திக்காக – வாண்மையின் பல்வேறு பாpமாணங்களையூம் விருத்தி செய்தல் கற்பித்தலை மேம்படுத்தல் மேற்பார்வையை விளைதிறனாக்குதல்
    முகாமைத்துவம் - தலைமைத்துவம் தொடர்பாடல் ஆளிடைத் தொடர்பு பங்கேற்புத் திட்டமிடல் போன்றவற்றினை மேம்படுத்தல்
     எனவே செயற்றிட்ட கற்பித்தல் முறையானது மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு அதிகளவூ முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
செயல்நிலை கற்பித்தல் முறையானது பின்வரும் வகையில்  ஒழுங்கு அடிப்படையில் காணப்படுகின்றது.

    தந்திரோபாயத் திட்டமிடல்
    திட்டத்தினை அமுலாக்கல்
    அவதானிப்பு – மதிப்பீடு – சுயமதிப்பீடு
 முடிவூகள் தொடர்பான வெளிப்பாடுகள் அடுத்த செயலொழுங்குகளுக்கான  செயல்நிலை ஆய்வூ தொடர்பில் இரு நிலையூள்ளது.
1 பிரச்சினை இனங்காணும் நிலை - இங்கு கருதுகோள் கட்டியெழுப்பப்படும்
2 கருதுகோள் பரீட்சித்தல்

செயல்நிலை கற்பித்தல் முறையில் தொடர்பில் நான்கு படிநிலையூள்ளது.      
                                                                                                        
    திட்டமிடல்
    செயற்படுத்தல்
    அவதானித்தல்
    பிரதிபலித்தல்
         செயல்வழி கற்பித்தல் முறையானது குறிக்கோள்களை அடையூம்வரை தொடர்ச்சியானதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதுமான பலபடி முறைகளில் வழிகளில் ஆய்வூச் செயன்முறைகள் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகவூள்ளது. கல்வித் துறையூடன் தொடர்புபட்ட வகையில் செயல்நிலை கற்பித்தலானது இன்று முக்கியத்துவமுடையதாக மாறியூள்ளது. குறிப்பாக பாடசாலையில் வகுப்பறையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வூ காணும் நிலையில் செயல்நிலை முறையானது முக்கியத்துவமுடையதாகின்றது.

        செயல்வழி கற்பித்தலானது குறிப்பிட்டவோ சந்தர்ப்பத்தில் உடன்பாடான மாற்றங்களை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டுள்ளதே தவிர பொதுமையாக்கலையல்ல. செயல்வழி முறையானது பாடசாலைகளில் பல சுழற்சிகளை கொண்டதாக காணப்படுகின்றது.

ஒரு வகுப்பறையில் செயல்நிலை கற்பித்தல் முறையானது பின்வரும் வகையில் படிகளை கொண்டதாக காணப்படுகின்றது.

    பிரச்சினையை அடையாளப்படுத்தல்
    சூழ்நிலையினை விளங்கிக் கொள்ளல்
    செயற்பாட்டு உபாயங்களை விருத்தி செய்தல்
    அவற்றை நடைமுறைப்படுத்துதல்
    ஆசிரிய அறிவூட்டப்படல்
   ஆசிரியரின் பிரயோகம் தொடர்பில் விளங்கிக் கொள்ளல்
    வகுப்பறைச் சூழ்நிலை விருத்தி செய்யப்படல்
            
          செயற்றிட்ட வளங்களாக உற்பத்திச் செயற்றிட்டங்கள் அதாவது கற்றல், வேறு ஏதாவதை உற்பத்தி செய்தலாக அமைகின்றது. உதாரணமாக கண்காட்சி, நாடகம், மழைமானி ஆக்கல், மணல் மணிக்கூடு செய்தல், நிறச்சாயம் தயாரித்தல் என்பவையாகும். அத்துடன் முருகியல் இன்பத்தை நோக்கமாக கொண்ட திரைப்படம், நாடகம் ரசித்தல், விமர்ச்சித்தல், கல்விச் சுற்றுலாவில் பங்கு கொள்ளல், சங்கீதம் கேட்டல், ஓவியம் ரசித்தல் என்பவையாக உள்ளன. அதிகளவூ பிரச்சினைகளை தீர்ப்பதில் இக்கற்பித்தல் முறையானது பங்குக்கொள்கின்றது. உதாரணமாக பார்த்தால் திறன்களை வழங்கும் பயிற்சிச் செயற்றிட்டங்கள், இதிலே தமிழ்மொழிப் போட்டிப் பயிற்சிகள், கணிதப்பிரச்சினை தீர்த்தல், பல்வேறு விடயங்களில் நிபுணத்துவ அறிவைக் கொடுக்க இம்முறையானது மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றது.

செயற்றிட்ட முறையினை நிறைவேற்ற பின்வரும் நான்கு படிமுறைகளை கைக்கொள்ளலாம்.

    பிரச்சினையை தீர்த்துக் கொள்ளல்
    திட்டமிடல்
    திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிறைவேற்றல்
    மதிப்பிடல்

          குறிப்பாக ஒவ்வொரு படிமுறையிலும் மாணவர்களின் எண்ணங்களைக் கருத்திற் கொண்டு இவர்களின் செயற் திறன்களை ஊக்குவித்தத் தூண்டுதல் மிக முக்கியமாகும். முதலாவது படியில் பாடம் தொடர்பான பிரச்சினையை தீர்மானித்தல், அடுத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகளைத் திட்டமிடல், திட்டமிடலைச் செயற்படுத்தல், ஆசிரியர் மேற்பார்வை செய்தல், பலனைப் பெறல், பின்னர் குறிக்கோள்கள் நிறைவேறினவா என்பதனை மதிப்பிடலாக அமைகின்றது.

      நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள இம்முறை பெறும் பயற்சி அளிப்பதால் வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல்களை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அதிலும் தவறுகளை முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கின்றது. இன்று பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடானது 5E    மாதிரி முறையினைக் கொண்டிருக்கின்றமை முக்கியமான ஒரு விடயமாகும்.                            

Visvalingam Prashanthan

Dept of Education & Child Care
Faculty of Arts & Culture
Eastern University, Sri Lanka
9471 3142200, 9475 2354616 & Prashan002@gmail.com
Web - https:www.prashanthan002.blogspot.com   
Facebook - https://www.facebook.com/visvalingam.prashanthan
Twitter - https://twitter.com/prashanthan002

Linkedin - https://lk.linkedin.com/.../visvalingam-prashanthan











         

No comments:

Post a Comment