Thursday, February 12, 2015

கல்வித் திட்டமிடல்

முகாமைத்துவக் கருமங்களினூடாக (Management Process) அடைய எதிர்பார்க்கப்படும் பிரதான இலக்கு நிறுவனத்தின் வெளியீடு ஆகும். நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு வளங்களை முகாமைத்துவக் கருமங்களினுள் உட்படுத்தி இத்தகைய பணி இடம்பெறுகின்றது.
முகாமைத்துவ செயன்முறை என்பது குறித்துரைக்கப்பட்ட ஒரு நுட்பத்தின் கீழ் நிறுவனக் கருமங்களை மேற் கொள்ளுதல் ஆகும்.

முகாமைத்துவ செயல் முறையில் உள்ளடங்கும் கருமங்களாக தற்காலத்தில் பின்வரும் நான்கு பிரதான கருமங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

    திட்டமிடல் (Planning)
    ஒழுங்கமைத்தல் (Organizing)
    தலைமை வகித்தல் (Leading)
    இயைபாக்கல்
    கட்டுப்படுத்தல் (Controlling)

தற்காலத்தில் சில நூல்களில் முகாமைத்துவக் கருமங்களை மேற்குறிப்பிட்ட கருமங்களுக்கு மாறாக வேறு வகையில் குறிப்பிடுகின்றனர். அதாவது திட்டமிடல்இ ஒழுங்கமைத்தல்இ நெறிப்படுத்தல், (Directing) மற்றும் கட்டுப்படுத்தல் என்றவாறு வகைப்படுத்துவதோடு மேலும் சில நூல்களில் திட்டமிடல்இ ஒழுங்கமைத்தல்இ நெறிப்படுத்தல் இ திணைக்களப்படுத்தல், (Staffing) கட்டுப்படுத்தல் எனவூம் வகைப்படுத்துகின்றனர். மேற் குறிப்பிட்ட வகைப்பாடுகளில் எது சரியானது என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. எவ்வாறெனினும் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வகைப்பாடாக முதற் குறிப்பிட்ட நான்கு முகாமைத்துவக் கருமங்களையே நாம் குறிப்பிடலாம்.

    திட்டமிடல் (Planning) என்பது நிறுவனத்தின் நோக்கங்களை வரையறுத்துக் கொள்ளல் இ அத்தகைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கப் பொருத்தமான வழி வகைகளை தீர்மானித்துக் கொள்ளல் ஆகும். (The process of establishing goals and a suitable course of action for achieving those goals). அதாவது ஒரு நிறுவனத்தின் நோக்கத்தினை வரையறுத்து அதனை அடையூம் பொருட்டு செயற்பாடுகளை திர்மானித்து அவற்றினைக் ஒன்றினைத்துக் கொள்வதனை திட்டமிடல் செயற்பாடானது குறிக்கின்றது. திட்;டமிடல் என்ற செயற்பாடானது நாம் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்இ யாரால் செய்யப்பட வேண்டும்இ எவ்வாறு செய்யப்படல் வேண்டும் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு திட்டமிடலானது எதிர்கால நிகழ்வூகள் தொடர்பாக நிகழ்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதாகும்.

    நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தின் பின் எத்தகைய நிலையில் காணப்பட வேண்டும்? அந்நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு செல்வது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை திட்டமிடல் பணியினூடாக கிடைக்கின்றது. திட்டமிடல் என்பது மிக முக்கியமானதாகும். முகாமைத்துவப் பணிகளைப் பொறுத்தமட்டில் ஆரம்பப் பணியாகவூம் காணப்படுகின்றது. இதற்கு காரணம் திட்டமிடலினை அடிப்படையாகக் கொண்டே ஏனைய முகாமைத்துவக் கருமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனம் செல்ல வேண்டிய பாதை எது என்பதை வரையறுத்துக் கொள்வது திட்டமிடல் ஆகும். மேலும் எதிர்கால மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு சிறப்பாக முகங்கொடுப்பதற்கச் சிறந்த திட்டமிடல் அவசியமானதாகும்.

    ஒரு திட்டமிடலை மேற்கொள்ளும் போது நான்கு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
    நோக்கத்தை வரையறுத்தல்
    நோக்கத்தை அடையூம் பொருட்டு கொள்கைகளை தீர்மானித்தல்
    செயற்பாடகளை மேற்கொள்ளும் பொருட்டுஇ வளங்களை ஒதுக்கீடு செய்தல்
    செயற்பாடுகளை அமுல்படுத்தல்

    “திட்டமிடத் தவறுதல்இ தவறு செய்யத் திட்டமிடுதலுக்கு ஒப்பானது" (If you fail to plan, you are planning to fail) ) என்ற பழமொழி நம் வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். உண்மையில் திட்டமிடுதல் என்றால் என்ன? திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வழிகளை யோசித்துஇ அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும். எமது இலக்கு அல்லது குறிக்கோளில் நாம்; தௌpவாக இல்லையெனில்;இ  சரிவர திட்டமிட இயலாது. எனவேஇ திட்டமிடுதலுக்கு அதி முக்கியமானது முதலில் நாம் விரும்பும் இலக்கு என்ன என்பதைப் பற்றிய தௌpவடைதல் மிக முக்கயமாகும். நம் வாழ்வில் ஏராளமான விடயங்களுக்கான திட்டத்தை மனதளவிலேயே நிகழ்த்தப்படுகிறது. உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு திட்டமிடுதல் என்பது மிக குறைவான ஒன்றாக காணப்படுகின்றது.

முக்கியமாக நிதி தொடர்பான விடயங்கள் சம்பந்தமாக எடுக்கப்படும் முக்கிய முடிவூகளில் திட்டமிடல் நடைமுறையாகும். உதாரணமாகஇ பெற்றௌர்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு உதவூம் வண்ணம் ஏதேனும் ஒரு தொகையை சேமிக்க எண்ணுகிறீர்கள். ஒரு குழந்தை நலத்திட்டத்தை தேர்வூ செய்து அது பெற்றௌரின் எண்ணம் ஈடேறுவதற்கு உதவூம் என்று அவர்களாகவே முடிவூ செய்து கொள்கிறீர்கள். குழந்தையின் படிப்பு மற்றும் பணி ஓய்வூ போன்ற இலக்குகள் பெற்றௌரின்; மனதில் இருந்தாலும்இ அவர்கள் தேர்வூ செய்யூம் திட்டங்களின் குறை நிறைகளை எடை போட்டுஇ தேவையான பலன் எப்போது கிடைக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துஇ இலக்கை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க பெற்றௌர்கள் தவறி விடுகிறீர்கள். இது சரியான திட்டமிடுதல் ஆகாது.

மேம்போக்காக ஏதோ ஒன்றை தேர்வூ செய்து எதிலோ ஒன்றில் முதலீடு செய்வது இலக்கை எட்டுவதற்கு எவ்வழியிலும் எமக்கு உதவாது. இலக்குகள் அனைவருக்கும் வாழ்நாளில் எட்ட வேண்டியவை என்று சில இலக்குகள் மற்றும் மைல்கற்கள் இருக்கும். இவை தொழில்முறை சார்ந்ததாகவோ தனிப்பட்ட வாழ்வை சார்ந்ததாகவோ இருக்கலாம். இவற்றுள் பெரும்பாலானவற்றுக்குஇ அதிலும் முக்கியமாக தனிப்பட்ட வாழ்வைச் சார்ந்தவற்றுக்குஇ பணம் அத்தியாவசியமானதாக இருக்கலாம். ஆகவே இவ்வாறான விடயங்களுக்கு திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும்.

எனவே வாழ்வின் சில பிரதான குறிக்கோள்களை எட்டுவதற்குஇ எவ்வளவூ நிதி நிலவரத்தை திட்டமிடல் என்பதே அடிப்படையாக இருக்கும். நிதி திட்டமிடுதல் தனிப்பட்ட வாழ்வின் குறிக்கோள்களான கனவூ இல்லத்தை வாங்குவதுஇ கனவூ வாகனத்தை சொந்தம் கொள்வதுஇ குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதுஇ விடுமுறைகளுக்குச் செல்வதும்இ விரும்பும் நேரத்தில் பணி ஓய்வூ பெறுவது போன்ற அனைத்திற்கும் பணம் தேவைப்படுவதினால்இ இவை அனைத்தும் நிதி சார்ந்த இலக்குகளாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் திட்டமிடுதல் மிக அவசியமாகும். இதுவே நிதி தொடர்பான திட்டமிடுதல் என்பதாகும்.

நிதி தொடர்பான திட்டமிடல் என்பது சிறப்பான நிதி நிர்வாகத்தின் மூலம் வாழ்வின் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு செயற்பாடாகும். இது ஒரு தனிப்பட்ட நபரின் மற்றும் குடும்பத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களை கண்டு கொள்ள வாய்ப்புக்களை வழங்குகின்றது. பணத்தின் அளவீடுகளிலான இலக்குகளாக மாற்றிஇ தனிப்பட்ட நபரின்ஃகுடும்பத்தின் எதிர்கால குறிக்கோள்களை சரியான நேரத்தில் எட்டுவதற்கான நிதி முதலீடுகளை திட்டமிட உதவூவதாகும். ஒரு நிதித்திட்டம் என்பது; எதிர்கால இலக்குகளுக்கானதொரு திட்டமிடலாக காணப்படுகின்றது. எனவே இன்று திட்டமிடலானது நடைமுறையான வாழ்வில் காணப்படுகின்றது. இன்று சகல துறைகளிலம் இவ் திட்டமிடல் செயற்பாடானது முக்கியப்படுத்தபடுகின்றது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் அதிகமாக காணலாம். அதாவது ஒரு நாட்டின் மக்கள் தமது வாழ்வின் தேவைகளையூம்இ குறிக்கோள்களையூம் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் ஆகக் கூடிய வினைத்திறன் மற்றும் பயனுறுதி தன்மையூடன் அடைவதற்கான விஞ்ஞான ரதீயான அமைந்த ஒழுங்கான ஒரு செயன்முறையே கல்வித்திட்டமிடல் ஆகும். கல்வித்துறையில் திட்டமிடலானது சகல தேவைகளையூம் குறிக்கோள்களையூம் மையமாக கொண்டே ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. பாடசாலை ஒரு நிறுவனம் என்ற ரீதியில் மிகவூம் உச்சமான வினைத்திறனையூம்இ விளைத்திறனையூம் எதிர்பார்த்து தன்னுடைய சகல விதமான நடவடிக்கைகளையூம் சிறப்பான முறையில் தீர்மானித்து செயற்படுகின்றது. பொதுவாகவே கல்வித்துறையில் இத்தகைய தீர்மானம் பற்றிய விஞ்ஞான ரீதியான ஒரு பொறிமுறையே கல்வித்தி;ட்டமிடல் எனப்படுகின்றது.

    இன்றைய நிலையில் சமூகத்தினரின் வாழ்க்கை நிலையினை உயர்த்துவதில் திட்டமிடல் எல்லா நாடுகளினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் வளர்ச்சிப் பாதையை எடுத்து நோக்கினால் அது பல கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. மக்களது பொருளாதார நிலையினை உயர்வடையச் செய்தல்இ வேறுபாடின்றி அனைவரும் முன்னேற்றமடைய வாய்ப்பு வழங்குதல்இ மக்களது உடல் நலம் பேணல் என்பன அவற்றுள் சிலவாகக் காணப்படுகின்றன. எந்தத் துறை சார்ந்ததாக மேற்கொள்ளப்படு­கின்ற திட்டங்களும் காலம்இ இடம்இ வளங்களின் அளவூ தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடல் செய்மு­றைக்கு உட்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

    ஒரு நாட்டின் தேவைக்கேற்ப அமைக்கப்படும் கல்வித் திட்டமிடலானது தேசிய மாகாணஇ மாவட்டம் என்றவாறு பல படிகளைத் தாண்டி பாடசாலை மட்டத்திலே பாடசாலை மட்டத் திட்டமிடலாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த வகையில் பாடசாலைத் திட்டமிடலின் வினைத்திறன் விளைதிறனானது அந்தப் பாடசாலை ஆளணியினரிடையே தங்கியூள்ளது எனலாம். பாட இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் அனைத்தும் உள்ளடங்கும் வண்ணம் பாடசாலை மட்டத்திட்டமிடல் திட்டமிடப்படுவது அவசியமாகும். கல்வித்திட்டமிடலின் பிரகாரம் மூன்று தவணைகள் பாடசாலை தொடங்கும் நேரம் முடிவடையூம் நேரம் என்பன எல்லாப் பாடசாலைகளுக்கும் ஒன்று எனினும் பாடசாலை அடைவூகள் வேறுபாட்டிற்குக் காரணம் அப்பாடசாலை மட்டத்திட்டமிடல் செயற்பாடுகளே ஆகும். இந்த வகையில் ஒரு பாடசாலையின் வெற்றிக்கு வழிவகுப்பது சிறந்த திட்டமிடலே என்பதை யாரும் மறுக்க முடியாது.

    பொதுவாக இன்றைய நடைமுறை வாழ்க்கையில் சகல விதமான செயற்பாடுகளுக்கும் திட்டமிடல் என்பது அடிப்படையாக அமைகின்றது என்று குறிப்பிடலாம். குறிப்பாக ஒரு நிறுவன மட்டங்களில் முகாமைத்து பணிகளில் திட்டமிடல் செயற்பாடிற்கே அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதனை சாதாரணமாக அவதானிக்கலாம. திட்டமிடலானது ஒரு வேலைக்கு முன்னதாக செய்யப்படும் ஆயத்த நிலையினை குறிக்கின்றது.

By:V.Prashanthan (B.Ed)

No comments:

Post a Comment